கல்லூரி மாணவியிடம் சில்மிஷம்: கண்டக்டர் சஸ்பெண்ட்

கல்லூரி மாணவியிடம் சில்மிஷம்: கண்டக்டர் சஸ்பெண்ட்
X

காணை காவல்நிலையம்

கல்லூரி மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட அரசு போக்குவரத்து கழக நடத்துநர், ஓட்டுநர் ஆகியோர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டனர்.

விழுப்புரம் மாவட்டம்,காணை ஒன்றியத்திற்கு உட்பட்ட கோனூர் கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் மூன்றாம் ஆண்டு கணிதம் படித்து வருகிறார். வியாழக்கிழமை சென்னையில் இருந்து வீட்டிற்கு வருவதற்காக விழுப்புரத்திற்கு அரசு பேருந்தில் வந்தார்,

விழுப்புரம் சிக்னலில் இறங்கிய அவர், தனது கிராமமான கோனூர் செல்வதற்காக கொத்தமங்கலம் வரை செல்லும் அரசு நகர பேருந்து தடம் எண் 27-ல் ஏறினார், அப்போது பேருந்தில் அவருடன் சேர்த்து மொத்தம் 5 பேர் பயணம் செய்து கொண்டு இருந்தனர். அவர்கள் வழித்தடத்தில் உள்ள பெரும்பாக்கம் என்ற இடத்தில் இறங்கி விட்டனர். அதன்பின்பு இந்த இளம்பெண் மட்டும் அந்தப் பேருந்தில் இருந்துள்ளார்,

அப்போது இந்த இளம்பெண்ணிடம் பேருந்தின் நடத்துனர் சிலம்பரசன் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அதற்கு ஓட்டுநர் அன்புசெல்வனும் உடந்தையாக இருந்துள்ளார். இதுகுறித்து அந்த இளம்பெண் காணை காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

காணை போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்துனர் சிலம்பரசன் மற்றும் ஓட்டுநர் அன்புசெல்வன் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர், இதனால் விழுப்புரம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் நடத்துனர் சிலம்பரசன், ஓட்டுநர் அன்புசெல்வன் ஆகியோரை அரசு போக்குவரத்து கழகம் தற்காலிக பணி நீக்கம் செய்துள்ளது

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்