அரசு ஊக்கத்தொகை அதிகரிக்கவேண்டும் : கரும்பு விவசாயிகள் கோரிக்கை

அரசு ஊக்கத்தொகை அதிகரிக்கவேண்டும் : கரும்பு விவசாயிகள் கோரிக்கை
X
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் நடைபெற்ற கரும்பு விவசாயிகள் கூட்டத்தில் அரசு ஊக்கத் தொகையை 500 ரூபாயாக உயர்த்த கோரிக்கை

கரும்பு விவசாயிகளுக்கு அரசு ஊக்கத்தொகை ரூ.500 உயர்த்தி வழங்க வேண்டும் விவசாய சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் முண்டியம்பாக்கம் கரும்பு விவசாயிகள் சங்க பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு ராஜஸ்ரீ சுகர்ஸ யூனிட்-11,செஞ்சி செம்மேடு ராஜஸ்ரீ சுகர்ஸ் யூனிட்-111ஆகிய இரு ஆலைகளின் கரும்பு விவசாயிகள் சங்கத் தலைவர் வழக்குரைஞர் டி.பாண்டியன் தலைமை வகித்தார். பொதுச்செயலர்ஆறுமுகம், பொருளாளர் பரமசிவம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் 2021-2022-ஆம் ஆண்டு கரும்பு முதன்மைப் பருவத்துக்குகரும்புகளை அனுப்பிய விவசாயிகளுக்கு கரும்பு கிரையத்தொகையை உடனடியாகபட்டுவாடா செய்ய தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.2021-2022-ம் ஆண்டு கரும்புபருவத்துக்கு அரசு வழங்கும்ஊக்கத்தொகை ரூ 195-யைபின்வரும் கரும்பு அரைவைமுடிந்ததும் அரசிடமிருந்துபெற்றுத் தர ஆலை நிர்வாகம்நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விவசாயிகள் வெட்டி அனுப்பியகரும்புகளுக்கு கிரையத்தொகையை விவசாயிகள்வெட்டி அனுப்பிய கரும்புகளுக்கு கிரையத் தொகையை 15நாள்களுக்குள் வழங்க வேண்டும். கரும்பு வெட்டுக்கூலியை ஆலை நிர்வாகம் ஏற்றுக் கொள்ள வேண்டும், 2022-23ஆம் ஆண்டுகரும்பு அரைவை பருவத்திற்கு தமிழக அரசு ஊக்கத்தொகையாகரூ.500 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள்நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், சங்க நிர்வாகிகள் கலிவரதன்,பெருமாள், கிருஷ்ணதாஸ், ராஜாராமன், வெங்கடசாமி,பன்னீர்செல்வம், காத்தவாரயன், ராஜசேகர், விஜயகுமார்,தண்டபாணி, தேவேந்திரன் உள்ளிட்டோர்கலந்து கொண்டனர்.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil