விழுப்புரத்தில் அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

விழுப்புரத்தில் அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
X

விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட  தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர்

விழுப்புரத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

விழுப்புரத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள நகராட்சி திடலில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் சரவணன் தலைமை தாங்கினார்,சிஐடியு மாவட்ட செயலாளர் ஆர்.மூர்த்தி,தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் சிவக்குமார், கலந்து கொண்டு புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையத்தை கலைத்து தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் உள்ள அனைத்து சந்தாதாரர்களையும் வரையறுக்கப்பட்ட பயனளித்து ஓய்வூதிய முறையின் கீழ் கொண்டுவர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர், ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பியவாறு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags

Next Story
நீதிமன்றம் உத்தரவிட்டது பாதிக்கப்பட்டவருக்கு அதிகபட்ச இழப்பீடு வழங்க உத்தரவு..!