விழுப்புரம் மாவட்டத்தில் 10 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது
நல்லாசிரியர் விருது பெற்ற செல்லையா ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தொரவி.
விழுப்புரம் மாவட்டத்தில் 10 ஆசிரியர்கள் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டனர்.
பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது செப்.5 -ல் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நிகழாண்டில் தமிழகம் முழுவதும் மொத்தம் 396 பேருக்கு விருதுகள் வழங்கப்படவுள்ளன.
இதில் விழுப்புரம் மாவட்டத்தில் தொரவி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் செல்லையா, கஞ்சனூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் பணியாற்றி வரும் பட்டதாரி ஆசிரியர் ஜெயராணி, விழுப்புரம் காமராஜ் நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர் ராஜசேகரன், சித்தலிங்கமடம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் ஜனசக்தி, செ.கொத்தமங்கலம் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தண்டபாணி, கோனேரிக்குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இடைநிலை ஆசிரியர் ஆரோக்கியராஜ்,
பனப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இடைநிலை ஆசிரியர் தமிழழகன்(உள்படம்) , ராஜம்புலியூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கரநாராயணன், திண்டிவனம் மான்போர்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் அமல்ராஜ், விழுப்புரம் தூய இருதய ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் பெருமாள் ஆகியோர் மாநில நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி கிருஷ்ணப்பிரியா உள்ளிட்ட கல்வித்துறை அதிகாரிகள் பலரும், வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu