விழுப்புரத்தில் ரஜினி பிறந்தநாளை முன்னிட்டு கண் சிகிச்சை முகாம்

விழுப்புரத்தில் ரஜினி பிறந்தநாளை முன்னிட்டு கண் சிகிச்சை முகாம்
X

ரஜினி பிறந்தநாளை முன்னிட்டு விழுப்புரத்தில் நடைபெற்ற கண்சிகிச்சை முகாம் 

விழுப்புரத்தில் ரஜினி பிறந்தநாளை முன்னிட்டு இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு விழுப்புரம் மாவட்ட ரஜினி ரசிகர் மன்றம் சார்பில் விழுப்புரம் தனியார் பள்ளியில் கண்சிகிச்சை முகாம் நடைபெற்றது, இந்நிகழ்ச்சிக்கு விழுப்புரம் மாவட்ட ரஜினி ரசிகர் மன்ற தலைவர் எத்திராஜ் தலைமை தாங்கினார்.

இந்நிகழ்ச்சியில் திமுகவின் முன்னாள் நகர மன்ற தலைவரும் திமுக மாவட்ட பொருளாளருமான ஆர்.ஜனகராஜ் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி, கண் சிகிச்சை முகாமை தொடங்கி வைத்தார், நிகழ்ச்சியில் ரஜினி மக்கள் மன்ற விழுப்புரம் நகர செயலாளர் ஜெயராமன் உட்பட ரசிகர் மன்றத்தின் முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

இந்த கண் சிகிச்சை முகாமில் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு கண் பரிசோதனை செய்து கொண்டு பயன் அடைந்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!