விழுப்புரத்தில் காவலர் தேர்வுக்கு இலவச பயிற்சி: கலெக்டர் மோகன் அறிவிப்பு

விழுப்புரத்தில் காவலர் தேர்வுக்கு இலவச பயிற்சி: கலெக்டர் மோகன் அறிவிப்பு
X

கலெக்டர் மோகன்.

விழுப்புரம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் காவலர் தேர்வுக்கு இலவச பயிற்சி அளிக்கப்பட இருப்பதாக ஆட்சியர் மோகன் தெரிவித்துள்ளார்.

விழுப்புரத்தில் நடக்கவுள்ள காவலர் பணி தேர்வுக்கு இலவச பயிற்சி அளிக்கபடவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் மோகன் தகவல் தெரிவித்து உள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

விழுப்புரம் மாவட்ட வழிகாட்டும் மையத்தில் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறியில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தில் பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இப்போட்டித் தேர்வில் கலந்து கொண்டு பல்வேறு மாணவர்கள் தேர்ச்சி பெற்று அரசுப் பணிகளில் சேர்ந்துள்ளனர். தமிழ்நாடு சீருடைப்பணியாளர்

தேர்வாணையத்தால் காவலர் பணியிடத்திற்காக (TNUSRB-PC) நடைபெறவுள்ள போட்டித் தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் 13.07.2022 அன்று முதல் விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் துவங்கப்படவுள்ளது.

இத்தேர்விற்கு 07.07.2022 முதல் 15.08.2022 வரை இணையவழியில் விண்ணப்பிக்கலாம். மேலும் இப்பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டு பயனடைய விரும்பும் நபர்கள் 12.07.2022 -க்குள் விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரில் அனுகி பதிவு செய்துகொண்டு விழுப்புரம் மாவட்டத்தைச் சார்ந்த இளைஞர்கள் வகுப்பில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!