அதிமுக சின்னம் முடக்க வாய்ப்பு முன்னாள் எம்பி பழனிச்சாமி பேச்சு

அதிமுக சின்னம் முடக்க வாய்ப்பு முன்னாள் எம்பி பழனிச்சாமி பேச்சு
X

விழுப்புரத்தில் நடைபுெற்ற அதிமுக கூட்டத்தில் பேசிய முன்னாள் எம்.பி. பழனிசாமி

விழுப்புரத்தில் நடைபெற்ற அதிமுக கூட்டத்தில் அதிமுக சின்னம் முடக்க வாய்ப்புள்ளதாக முன்னாள் எம்பி கே.சி.பழனிச்சாமி தகவல்

அ.தி.மு.க.வின் சின்னமும், கொடியும் தேர்தல் ஆணையத்தால் முடக்க வாய்ப்பு இருக்கிறது என்று முன்னாள் எம்.பி. பழனிசாமி கூறினார்.

விழுப்புரத்தில் அ.தி.மு.க. தொண்டர்களுக்கான ஆலோசனை கூட்டம் முன்னாள் எம்.பி. கே.சி. பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. அதனை தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அ.தி.மு.க.வில் யார் தலைமை பொறுப்பேற்க வேண்டும் என்ற உட்கட்சி யுத்தம் நடைபெறுகிறது. பல்வேறு பிளவுகளால் அ.தி.மு.க. பலவீனப்பட்டுள்ளதால் பா.ஜ.க. போன்ற கட்சிகள் கால் ஊன்றவும், தி.மு.க.வை வலிமை பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.

அ.தி.மு.க.வில் ஒற்றைத் தலைமைதான் வேண்டும் என தொண்டர்கள் எதிர்பார்க்கிற நிலையில், எடப்பாடி பழனிசாமியை ஒற்றை தலைமையாக்க திணிக்க பார்க்கின்றனர். தேசிய அளவில் அ.தி.மு.க. வளர்ச்சி பெற வேண்டும் என்பதுதான் ஜெயலலிதாவிற்கு நோக்கமாக இருந்த நிலையில் தற்போது சாதிய பார்வை, லஞ்சம், ஊழல், தொண்டர்கள் புறக்கணிக்கப்பட்டு அடிப்படை உறுப்பினர்களின் கருத்துகள் புறக்கணிக்கப்படுகிறது.

அ.தி.மு.க. ஒற்றை தலைமை பொதுக்குழு வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பினால் இருவரும் மாறி, மாறி மேல்முறையீடு மட்டுமே செய்து வருவதாலும், உட்கட்சி பூசலால் கட்சியின் சின்னமும், கொடியும் தேர்தல் ஆணையத்தால் முடக்க வாய்ப்பு இருக்கிறது. அ.தி.மு.க.வில் சாதி வாரியாக பிளவு ஏற்படுவதை தடுக்கவே தொண்டர்களை சந்தித்து வருகிறேன். ஓ.பன்னீர்செல்வத்தையும், எடப்பாடி பழனிசாமியையும் நம்பி அ.தி.மு.க. இல்லை. இருவருக்கும் இங்கு தலைமை பொறுப்பேற்க வேண்டிய சுயநலம்தான் உள்ளதாக அவர் கூறினார்.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil