முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் மீது விழுப்புரம் போலீசார் வழக்கு

முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் மீது விழுப்புரம் போலீசார் வழக்கு
X

முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம்.

காவல்துறையினரை அவதூறாக பேசியதாக, முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மீது விழுப்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

கடந்த இரு தினங்களுக்கு முன்பு விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில், விழுப்புரம் நகராட்சியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி, வாக்கு சேகரிக்கும் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்துகொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது காவல்துறை குறித்து அவதூறாக பேசியதாக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் மீது வி.ஏ.ஓ கொடுத்த புகாரின் பேரில் 294 (B) மற்றும் 504 ஆகிய 2 பிரிவுகளின் கீழ் விழுப்புரம் மேற்கு காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
ai marketing future