பாமக முன்னாள் எம்எல்ஏ கொலை மிரட்டல்: எஸ்பியிடம் புகார்

பாமக முன்னாள் எம்எல்ஏ கொலை மிரட்டல்:  எஸ்பியிடம் புகார்
X

முன்னாள் எம்எல்ஏ மீது எஸ்பியிடம் புகார் அளித்த முன்னாள் சேர்மன்

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி தொகுதி முன்னாள் எம்எல்ஏ பாபு கணேஷ் கொலை மிரட்டல் விடுவதாக எஸ்பியிடம் முன்னாள் சேர்மன் புகார்

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டத்திற்கு உட்பட்ட கல்லடிகுப்பத்தை சேர்ந்த முன்னாள் வல்லம் ஒன்றிய சேர்மன் ஏழுமலை என்பவர் ரோடு ஒப்பந்த பணிகள் எடுத்து செய்து வந்துள்ளார். அதில் தனக்கு கமிஷன் கேட்டு முன்னாள் எம்எல்ஏ பாபு கணேஷ் மிரட்டியதோடு, தனது ஆதரவாளர்கள் அருண்மொழிதேவன் சக்திவேல், பாபு, நரசிம்மன் ஆகியோரை அனுப்பி நாட்டார்மங்கலத்தில் உள்ள ஏழுமலையின் அலுவலகத்தை அடித்து நொறுக்கியுள்ளனர். மேலும், ஏழுமலையையும் அவரது குடும்பத்தினரையும் கொலை செய்யப்போவதாக மிரட்டி சென்றுள்ளனர்.

இந்நிலையில் இது குறித்து செஞ்சி காவல் நிலையத்தில் புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்காததால், உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்பு வழங்கி, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என எஸ்பியிடம் ஏழுமலை இன்று மனு அளித்தார்.

மனுவை பெற்றுக்கொண்ட காவல் கண்காணிப்பாளர் விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!