விழுப்புரம்: வாகன சோதனையில் ரூ.27 லட்சம் மதிப்பிலான நகை பறிமுதல்

விழுப்புரம்: வாகன சோதனையில் ரூ.27 லட்சம் மதிப்பிலான நகை பறிமுதல்
X

வாகன சோதனையில் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் 

விழுப்புரத்தில் கீழ்பெரும்பாக்கம் பகுதியில் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் ரூ.27 லட்சம் மதிப்பிலான நகை பறிமுதல்

தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சித்தேர்தல் அறிவிக்கப்பட்டதை அடுத்து தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் விழுப்புரம் நகராட்சி கீழ்பெரும்பாக்கம் பகுதியில் உள்ள ரயில்வே மேம்பாலம் கீழே விழுப்புரம் தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.

அப்போது அவ்வழியாக வேகமாக வந்த விழுப்புரம் பகுதியைச் சேர்ந்த குமரன் என்பவரின் இருசக்கர வாகனத்தை மறித்து சோதனை செய்தனர். சோதனையில் வாகனத்தில் ரூ.10 லட்சம் மதிப்பிலான கம்மல், ஜிமிக்கி ஆகிய பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை கொண்டு வந்தவரிடம் விசாரணை செய்ததில் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தார்.

மேலும் அதற்கான எந்த ஆவணங்களும் அவர் எடுத்து வரவில்லை. அதனால் பறக்கும்படையினர் அந்தப் பொருளை பறிமுதல் செய்து விழுப்புரம் நகராட்சி ஆணையர் சுரேந்திர ஷாவிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து மேலும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!