விழுப்புரம் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு

விழுப்புரம் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு
X

ஆற்றில் அடித்து செல்லப்பட்ட மயான கட்டடம்

விழுப்புரம் அருகே தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கிராமங்களை வெள்ளம் சூழ்ந்தது.

விழுப்புரம் மாவட்டம், தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பல கிராமங்களை வெள்ளம் சூழ்ந்து மக்கள் வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர்.

கடந்த சில நாட்களாக விழுப்புரம் மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது, இதனால் மாவட்டத்தில் ஏரி, குளங்கள் வேகமாக நிரம்பியது, ஆறுகளில் நீர்வரத்து அதிகரித்து வருகிறது,

இந்நிலையில் ஆற்றில் அதிகரித்து வரும் நீரை அப்படியே வெளியேற்றும் வகையில் பழுதான தளவானூர் தடுப்பணையை அதை வெடிவைத்து தகர்க்கும் பணி தோல்வி அடைந்தது.

இதற்கிடையே வியாழக்கிழமை இரவு தொடர்ந்து மாவட்டத்தில் பரவலாக பெய்த கனமழையால் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, ஆற்றுகரையோர கிராமத்தில் உள்ளே புக தொடங்கியது. மேலும் சாத்தனூர் அணையில் இருந்து வெள்ளிக்கிழமை காலை 6 மணி அளவில் வினாடிக்கு 51,000 கன அடி நீர் திறக்கப்பட்டதால் ஆற்றில் தற்போது வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

இந்நிலையில், வெள்ளப்பெருக்கால் தளவானூர் அணையில் இடது கரையில் மண் அரிப்பு மேலும் விரிவடைந்தது வருகிறது. அணையை உடைக்க நிறுத்தப்பட்டிருந்த மிதவை பொக்லைன் ஒரு கிலோமீட்டர் தொலைவில் இழுத்து செல்லப்பட்டு சிக்கி கிடக்கிறது.

ஆற்றங்கரையில் இருந்த கருமாதி கொட்டகை அப்படியே விழுந்து நொருங்கியது. ஆற்றங்கரையில் இருந்த பழமையான 3 புளிய மரங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. தளவானூர் அருகே திருப்பாச்சனூர் தரைப்பாலமும் வெள்ளத்தில் மூழ்கியது,


இதனால் தளவானூர், திருப்பாயச்சனூர், தெற்கு குச்சிப்பாளையம் ஆகிய பகுதிகளுக்கு போக்குவரத்து தடைைப்பட்டுள்ளது,மேலும் ஏனாதிமங்கலம் அருகே மாரங்கியூர், சேத்தூர், பையூர் மற்றும் கொங்கராயனூர் ஆகிய 4 கிராம மக்கள் ஊரை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். இதனால் 25 கிலோமீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!