கொலை முயற்சி வழக்கில் 5 பேருக்கு தலா ஐந்தாண்டு சிறை தண்டனை
திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்றம் பைல் படம்.
விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் தாலுகா காடகனூர் கிராமத்தை சேர்ந்தவர் காசிலிங்கம் மகன் சக்திவேல்(வயது 18). இவருக்கும், இவரது பக்கத்து வீ்ட்டை சேர்ந்த முனியப்பன் குடும்பத்துக்கும் இட பிரச்சினை காரணமாக முன்விரதம் இருந்து வந்தது.
கடந்த 23.6.2012 அன்று முன்விரோதம் காரணமாக சக்திவேலை முனியப்பன், அவரது சகோதரர் ராமச்சந்திரன், இவரது மகன்கள் கலாநிதி, ராமு, ராமச்சந்திரன் மனைவி சவுந்தரி ஆகிய 5 பேரும் சேர்ந்து தகாத வார்த்தையால் திட்டி உருட்டுக்கட்டை மற்றும் கொடுவாளால் சரமாரியாக தாக்கினர். இதுகுறித்து சக்திவேல், அரகண்டநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
அதன்பேரில் முனியப்பன் உள்ளிட்ட 5 பேர் மீது கொலை முயற்சி பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து 5 பேரையும் கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இவ்வழக்கில் சாட்சிகள் விசாரணை முடிவடைந்த நிலையில்,வழக்கை விசாரித்த நீதிபதி புஷ்பராணி, குற்றம் சாட்டப்பட்ட முனியப்பன் உள்ளிட்ட 5 பேருக்கும் தலா 5 ஆண்டு சிறை தண்டனையும், தலா ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். இதையடுத்து சிறை தண்டனை விதிக்கப்பட்ட 5 பேரும் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu