விழுப்புரம் மீன்வளத்துறை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்
மீன்வளத்துறை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட டெண்டர்தாரர்கள்
Fish Tenders -விழுப்புரம் மாவட்டத்தில் ஏரிகளை டெண்டர் விடுவதை அதிகாரிகள் ரத்து செய்ததால் ஆத்திரமடைந்த டெண்டருக்கு விண்ணப்பித்தவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரம் மீன் வளத்துறை சார்பில் விழுப்புரம் மாவட்ட பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 39 ஏரிகளில் மீன் பிடிப்பதற்காக 3 வருடத்திற்கு ஒருமுறை குத்தகை விடப்படுவது வழக்கம். இதற்கு கடந்த 17-ந் தேதியிலிருந்து டெண்டர் கோரப்பட்டு 28-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டு 31-ந் தேதி டெண்டர் விடப்படும் என மீன் வளத்துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
ஏரியில் மீன் பிடிப்பதற்கான டெண்டருக்கு குத்தகைதாரர்கள் பலர் விண்ணப்பித்து இருந்தனர். இந்நிலையில் கீழ் எடையாளம், அத்தியூர் திருக்கை, கக்கனூர், சென்னாகுனம், ஆலங்குடி ஆகிய 5 கிராமங்களில் உள்ள ஏரிகளுக்கு தலா ஒருவர் மட்டுமே டெண்டர் கோரியிருந்தார்.
ஆனால் ஒரு ஏரிக்கு 3 நபர்களுக்கு மேல் டெண்டர் கோரினால் மட்டுமே டெண்டர் விடப்படும் என கூறிய அதிகாரிகள் 5 ஏரிகளுக்கான டெண்டரை ரத்து செய்தனர்.
இதனையடுத்து டெண்டர் கோரியவர்கள் ஒரு நபர் மட்டுமே டெண்டர் கோரினால் ஏரியை குத்தகை விட முடியாது என முன் கூட்டியே ஏன் தெரிவிக்கவில்லை, இதுபற்றி டெண்டர் நோட்டீசிலும் குறிப்பிடவில்லை என கூறி விழுப்புரத்திலுள்ள மீன் வளத்துறை அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அலுவலக நுழைவுவாயில் முன்பு அமர்ந்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு வந்த விழுப்புரம் தாலுகா காவல்துறையினர்டெண்டர் கோரியவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது டெண்டர் நடத்தை விதிமுறைகளின் படி 3 நபர்களுக்கு மேல் குத்தகை ஏலம் கேட்டால் மட்டுமே டெண்டர் விடப்படும் என்ற விதிமுறை உள்ளதால் அதிகாரிகள் அதன் படி செயல்படுவதாக கூறினர். இதனைதொடர்ந்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது
விழுப்புரம் மாவட்டத்தில் ஏரிகளை நம்பி பாசன வசதி பெற்று லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்களில் விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர். இந்நிலையில் இது மாதிரி ஏரியில் மீன் குத்தகை எடுப்பவர்கள் ஏரியில் உள்ள தண்ணீரை வெளியேற்றி மீன்களைப் பிடித்து வருவதால், விவசாயம் ஆண்டுதோறும் பாதிக்கப்பட்டு வருகிறது.
அதனால் ஏரிகளில் விடப்படும் மீன் குத்தகை சம்பந்தப்பட்ட துறை கண்காணித்து நீரை வெளியேற்றாமல் மீன்களைப் பிடிக்க அறிவுறுத்த வேண்டும், அப்படி ஏரி தண்ணீரை வெளியேற்றி மீன்களைப் பிடிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து அந்த ஏரிகளை நம்பி உள்ள விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் மத்தியில் மீன் குத்தகைக்கு எதிரான மனநிலையில் கோரிக்கைகள் எழுப்பப்பட்டு வருகிறது,
ஆனால் ஆண்டுதோறும் வடகிழக்கு பருவமழை மற்றும் திடீர் மழைகளால் நிரம்பும் ஏரி தண்ணீரை ஒரு சில நாட்களுக்குப் பின்பு வெளியேற்றி மீன் பிடிக்கும் நிலை தான் தொடர்ந்த வண்ணம் இருக்கிறது என்பது சமூக ஆர்வலர்களின் குற்றச்சாட்டாக உள்ளது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu