அதிக பயணிகளை ஏற்றி வந்த தனியார் பேருந்துக்கு அபராதம்

அதிக பயணிகளை ஏற்றி வந்த தனியார் பேருந்துக்கு அபராதம்
X

பேருந்து (மாதிரி படம்)

விழுப்புரம் புதுச்சேரி சாலையில் அதிக பயணிகளை ஏற்றி வந்த தனியார் பேருந்துக்கு வருவாய்த்துறையினர் அபராதம் விதித்தனர்.

விழுப்புரம் வளவனுர் அருகே கொங்கராம்பாளையம் சோதனைச்சாவடியில் விழுப்புரம் வட்டாட்சியர் வெங்கடசுப்பரமணியன் தலைமையிலான வருவாய்த்துறையினர் கொரோனா தடுப்பு நடவடிக்கை தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்,

அப்போது புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் நோக்கி வந்த இராமன் என்ற தனியார் பேருந்தை நிறுத்தி சோதனை செய்தனர், சோதனையில் பேருந்தில் அதிக அளவில் பயணிகளை ஏற்றி வந்தது கண்டுபிடிக்கப்பட்டு, பேருந்துக்கு வட்டாட்சியர் ரூ 5,000 அபராதம் விதித்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!