பிரம்மதேசம் பகுதியில் காட்டுப்பன்றிகள் தொல்லை

பிரம்மதேசம் பகுதியில் காட்டுப்பன்றிகள் தொல்லை
X

பிரம்மதேசம் பகுதி வயல்களுக்குள், காட்டுப்பன்றிகளால் சேதமடைந்த தர்பூசணி பழங்கள்,

விழுப்புரம் மாவட்டத்தில், பல்வேறு பகுதிகளில் காட்டுப்பன்றிகள் தொல்லையால். விவசாயிகள் பெரும் அவதியடைந்து வருகின்றனர் .

விழுப்புரம் மாவட்டம், பிரம்மதேசம் பகுதியில் உள்ள தர்பூசணி வயல்களுக்குள் காட்டுப்பன்றிகள் புகுந்து அட்டகாசம் செய்து வருவதால், விவசாயிகள் கவலையடைந்து வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டம், பிரம்மதேசம் அருகே உள்ள சிறுவாடி, முருக்கேரி, நகர், தலைக்காணிகுப்பம், வங்காரம், காயல்மேடு, தேவநந்தல், நாணக்கால்மேடு, நடுகுப்பம், வண்டிப்பாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள 25-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள், 2,500 ஏக்கர் பரப்பளவு விளை நிலங்களில் ஆண்டுதோறும் தர்பூசணி சாகுபடி செய்து, பராமரித்து வருகிறார்கள். தற்போது தர்பூசணி பழங்கள் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது. ஒரு சில கிராமங்களில் விவசாயிகள், தர்பூசணிகளை அறுவடை செய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில், தர்பூசணி சாகுபடி செய்யப்பட்ட வயல்களுக்குள் கடந்த சில நாட்களாக நள்ளிரவில் காட்டுப்பன்றிகள் கூட்டம் கூட்டமாக புகுந்து, அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த பழங்களை தின்று அட்டகாசம் செய்து வருகின்றன. இதனால் பல ஆயிரம் ரூபாய் செலவு செய்து சாகுபடி செய்த தர்பூசணி பழங்களை பாதுகாக்க முடியாமல் பிரம்மதேசம் பகுதி விவசாயிகள் கவலையடைந்து வருகின்றனர்.

பாதிக்கப்பட்ட மற்றும் அப்பகுதி விவசாயிகள் காட்டுப்பன்றிகளை ஒழிக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் விரைவில் போராட்டத்தில் ஈடுபடுவோம் என கூறி வருகிறார்கள்.

ஆண்டுதோறும் இப்பகுதியில் பெரும்பாலான விவசாயிகள் தர்பூசணி பயிரை சாகுபடி செய்து பராமரித்து வருகிறார்கள், தற்போது பனிக்காலம் முடியும் நிலையில், கோடைக்காலம் தொடங்கவுள்ள நிலையில், தர்பூசணி கோடை அறுவடைக்கு தயாராகி வருகிறது, இந்நிலையில் அறுவடைக்கு வயல்களில் தயாராக உள்ள நிலையில் பழங்களை காட்டுப்பன்றிகள் தின்று சேதப்படுத்தி சென்று விடுகிறது, அதனால் தர்பூசணி விவசாயிகள் செய்வதறியாமல் இருந்து வருகின்றனர்,

மேலும் காட்டுப்பன்றிகள் அதிகம் உள்ள பகுதிகளில் துப்பாக்கியால் சுட்டுப்பிடிக்க அந்தந்த மாவட்ட ஆட்சியர் மூலம் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதுபோல் பிரம்மதேசம் பகுதி விவசாயிகள் நலன்கருதி காட்டுப்பன்றிகளை துப்பாக்கியால் சுட்டு ஒழிக்க, மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதி தர்பூசணி விவசாயிகள் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை எழுப்பி வருகின்றனர்.

வயலுக்குள் புகும் காட்டுப்பன்றிகளை விவசாயிகள் விரட்ட முயன்றால் அவைகள் விவசாயிகளை மூர்க்கத்தனமான தாக்குகிறது, இதில் விவசாயிகள் படுகாயமடைந்த பல சம்பவங்கள் தமிழ்நாட்டில் அரங்கேறி வருகிறது, ஒரு சிலர் காட்டு பன்றிகளின் மூர்க்கத்தனமான தாக்குதலில் உயிரிழந்த சம்பவங்களும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடந்து வருகிறது, அதனால் தான் இப்பகுதியில் உள்ள பெரும்பாலான விவசாயிகள் அச்சமடைந்து வயல்வெளி பக்கம் செல்வது குறைந்து வருகிறது, நாளுக்கு நாள் காட்டுப்பன்றிகள் தொல்லை அதிகரித்து வருவதால், காட்டுப்பன்றிகளை ஒழிக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுப்பதோடு, காட்டுப்பன்றிகளால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடும் வழங்கவேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர்.

காட்டுப் பன்றிகளால் விளை நிலங்களில் ஏற்படும் சேதத்திற்கு உரிய ஆவணங்கள் வழங்கினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வேளாண் துறை நிர்ணயிக்கும் இழப்பீடு தொகையை வனத்துறை சார்பில் இழப்பீடாக பெறலாம், ஆனால் காட்டுப்பன்றிகளை விரட்டுவதற்கோ அல்லது பிடிப்பதற்கோ தற்போது வரை எந்தவித வழிகளும் இல்லை என கூறப்படுகிறது, அதனால் விவசாயிகள் காட்டுப்பன்றிகள் தொல்லையால் பெரும் கவலையடைந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!