விவசாயிகளின் வெற்றியில் மோடியின் தோல்வியின் ஆரம்பம்: சிபிஎம் மாநில செயலாளர்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் மாநாட்டில் உரையாற்றுகிறார்
விழுப்புரம் மல்லிகை மஹாலில் எம்.சின்னப்பா நினைவரங்கத்தில் தொடங்கிய விழுப்புரம் மாவட்ட 23-வது மாநாட்டிற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.குமார் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.கோதண்டம் மாநாட்டு செங்கொடியை ஏற்றிவைத்தார், எஸ்.அறிவழகன் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். ஆர்.கண்ணப்பன் மாநாட்டுக்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்று பேசினார்,
மாநாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கலந்துகொண்டு மாநாட்டை தொடங்கி வைத்து,தொடக்க உரையாற்றுகையில், தமிழகத்தில் பிஜேபி ரவுடிகள் எல்லாம் கட்சியில் சேர்த்து பொறுப்பு வழங்கி வருகிறது, பிஜேபி ரவுடியிசத்தை தமிழகத்தில் கட்டவிழ்த்து விட்டு வருகிறது, ஒரு பக்கம் மோடி ஒட்டுமொத்தமாக தேசத்தை விற்று கொண்டிருக்கிறார், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் எல்லாம் தனியார் ஆளுமைக்கு செல்லுகிறது. ஏற்கனவே விமானங்களும், ரயில் நிலையங்களும் தனியாருக்கு விற்கப்பட்டு விட்டன. ஏன் விழுப்புரம் ரயில் நிலையம் அம்பானி ரயில் நிலையமாக மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை,
மூன்று வேளாண் சட்டங்களை நிறைவேற்றினார்கள், அதனை எதிர்த்து விவசாயிகள் 380 நாட்கள் டெல்லியை முற்றுகையிட்டு தொடர் போராட்டம் நடத்தி வெற்றி பெற்றிருக்கிறார்கள். எந்த பாராளுமன்றத்தில் மூன்று வேளாண்மை சட்டங்களை மோடி அரசு முன்மொழிந்ததோ அதே வாயால் அந்த சட்டங்களை திரும்ப பெறுகிறோம் என அறிவிக்க வைத்த புதிய வரலாற்றை படைத்த இயக்கம் விவசாய இயக்கங்கள்,2024 நடக்க உள்ள பாராளுமன்ற தேர்தலின் மோடியின் தோல்வி முகம் தொடங்கிவிட்டது, அதனை ஆரம்பித்து வைத்துள்ளவர்கள் விவசாய இயக்கங்கள், அதனால் மோடி அரசாங்கத்தை எதிர்க்கக்கடிய முக்கியமான கடமை நாம் முன்னெடுக்க வேண்டியுள்ளது,
எத்தனையோ எதிர்ப்புகளை தாண்டி வளர்ந்த இயக்கம் நமது செங்கொடி இயக்கம். ஒற்றுமையை குலைக்க மதவெறியை தீவிரமாக தூண்டி வருகிறது மோடி அரசு, இந்துத்துவா கொள்கையை எதிர்க்க வேண்டிய மகத்தான கடமையை ஆற்ற வேண்டிய நிலையில் செங்கொடி இயக்கம் இருக்கிறது, அதனால் தான் நாம் மதச்சார்பற்ற கூட்டணியோடு இருக்கின்றோம்,
தமிழ்நாட்டில் தாமரை மலரும் என்றார்கள், ஆனால் தாமரை மலரவில்லை கருகி கொண்டிருக்கிறது, தமிழ்நாட்டில் அதிமுக என்ற பெரிய கட்சியை கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு பாமகவை வைத்துத்துக்கொண்டு எப்படியாவது தனது ஆசை நாடகத்தை அரங்கேற்றிவிட துடித்துக் கொண்டிருக்கிறது, அதனால் மதசார்பற்ற கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஒற்றுமையை பாதுகாக்கும் கடமை நம்முன் இருக்கிறது என அவர் பேசினார்,
முன்னதாக விக்கிரவாண்டியில் இருந்து மாநாட்டு கொடி மற்றும் கொடி கம்பத்தை சாத்தனூர்,ஒரத்தூர், முண்டியம்பாக்கம் வழியாக எடுத்து வந்தனர், அதேபோல் கண்டமங்கலத்தில் இருந்து கொடிக்கயிறு எடுத்து வந்தனர், இதனையடுத்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இருந்து மாநாடு நடக்கும் இடத்திற்கு செங்கொடி ஏந்தியவாறு பேரணியாக சென்றனர்,அதனைத் தொடர்ந்து மாநாடு கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்றது, மாலை முதல் நாள் மாவட்ட மாநாடு நிறைவு பெற்றது. மாநாட்டில் மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.நூர் முகமது, முன்னாள் எம்எல்ஏ ஆர்.ராமமூர்த்தி, மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர்
தொடர்ந்து இரண்டாம் நாள் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் மாநாட்டில் தீர்மானங்கள், தொகுப்புரை, தகுதி ஆய்வுக் குழு அறிக்கை, விழுப்புரம் மாவட்ட புதிய மாவட்ட குழு தேர்வு, மாநில மாநாட்டு பிரதிநிதிகள் தேர்வு ஆகியன நடைபெற உள்ளது, மாநாட்டில் மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.நூர்முகமது மாநாட்டு நிறைவுரை ஆற்றவுள்ளார், மாநாட்டின் முடிவில் வரவேற்புக்குழு பொருளாளர் பி.சிவராமன் நன்றி உரை ஆற்றவுள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu