நந்தன் கால்வாய் திட்டத்தை துரிதபடுத்த விவசாயிகள் சங்க மாநாட்டில் வலியுறுத்தல்

விழுப்புரம் அருகே கண்டாச்சிபுரத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட மாநாடு நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநாடு நடைபெற்றது.மாவட்ட துணைத்தலைவர் கே.மாதவன் மாநாட்டில் சங்க கொடியை ஏற்றி வைத்தார். மாநாட்டிற்கு மாவட்ட தலைவர் பி.சிவராமன் தலைமை தாங்கினார். முன்னதாக வரவேற்பு குழு செயலாளர் எஸ்.கணபதி அனைவரையும் வரவேற்று பேசினார், மாவட்ட குழு உறுப்பினர் ஏ.நாகராஜன் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார்,
மாநில துணைச்செயலாளர் ஏ.வி.ஸ்டாலின்மணி மாநாட்டை தொடங்கி வைத்து தொடக்க உரையாற்றினார். மாவட்ட செயலாளர் ஆர்.டி.முருகன் வேலை அறிக்கையை சமர்ப்பித்தார். மாவட்ட பொருளாளர் பி.சௌந்தரராஜன் வரவு செலவு கணக்கை சமர்ப்பித்தார். மாநாட்டில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் பெ. சண்முகம், மாவட்ட செயலாளர் என்.சுப்பிரமணியன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.குமார்,தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில செயலாளர் எஸ். வேல்மாறன், சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் ஆர்.மூர்த்தி, அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் கே.சுந்தரமூர்த்தி, மாநில குழு உறுப்பினர் ஆர்.தாண்டவராயன் ஆகியோர் கலந்து கொண்டு மாநாட்டை வாழ்த்தி பேசினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu