ஆதரவு விலை சட்டம் இயற்றக்கோரி செஞ்சியில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

ஆதரவு விலை சட்டம் இயற்றக்கோரி  செஞ்சியில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
X

விழுப்புரத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் மத்திய பா.ஜ. அரசை கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வேளாண் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி இந்தியன் வங்கி அருகில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், செஞ்சி வட்டக்குழு தலைவர் கோ.மாதவன் தலைமை தாங்கினார்.நிர்வாகிகள். என்.சந்திரசேகர், கே.எஸ்.அய்யப்பன், ஏ.சின்னசாமி, எம்.சுரேஷ்குமார், வி.நரசிம்மராஜன், ஏழுமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், அகில இந்திய வழக்குறைஞர் சங்க நிர்வாகி ஆர்.ராமமூர்த்தி, கட்சி மாவட்ட செயலாளர் என்.சுப்பிரமணியன், மனித நேய மக்கள் கட்சியின் மாவட்ட தலைவர் எஸ்.சையத்உஸ்மான், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஆர்டி.முருகன்,க.வி.ஈ. செம்மேடு சர்க்கரை ஆலை தலைவர் டி.ஆர்.குண்டு ரெட்டியார், திராவிடர் கழகம் மாவட்ட செயலாளர் த. சே.வ.கோபண்ணா,விசிக நகர செயலாளர் செஞ்சி சிவா, ப.இ.பா.சங்க ஆகியோர் கலந்து கொண்டு அனைத்து வேளாண் விளை பொருட்களுக்கும் குறைந்த பட்ச ஆதரவு விலை உற்பத்தி செலவுக்குமேல் 50 சதவிகிதம் உயர்த்தி தீர்மானிப்பதுடன் அது கிடைப்பதை உத்திரவாதப்படுத்தும் வகையில் மத்திய சட்டம் இயற்றப்பட வேண்டும், அனைத்து வேளாண் விளை பொருட்களையும் அரசே கொள்முதல் செய்யவேண்டும்,மத்திய அரசு சிறுகுறு மற்றும் மத்திய தர விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் பெற்றுள்ள கடன்களை ஒருமுறை தள்ளுபடி செய்ய வேண்டும், 60 வயதான அனைவருக்கும் மாதம் ரூ.5000 ஓய்வூதியம் வழங்கவேண்டும்.

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தி, உணவுப் பொருட்களுக்கு ஜி.எஸ்.டி.யை ரத்து செய்யவேண்டும். பெட்ரோலிய பொருட்களுக்கான எக்ஸைஸ் வரியை குறைக்க வேண்டும், பொது விநியோக திட்டத்தில் அனைவருக்கும் 14 வகையான அத்தியாவசியமான பொருட்களை வழங்கவேண்டும், அனைவருக்கும் ஒருங்கிணைந்த கல்வி சுகாதாரம், உறுதிப்படுத்துவதுடன் தேசிய கல்விக் கொள்கை 2020 திரும்பப் பெற வேண்டும்,

வீடற்ற அனைவருக்கும் வீடு வழங்கப்பட வேண்டும், பெரும் பணக்காரர்களுக்கு வரி விதிக்கப்படுவதுடன், கார்ப்பரேட்களுக்கு வரி மற்றும் சொத்துவரி அறிமுகப் படுத்தப்படவேண்டும், தொழிலாளர் விரோத சட்ட தொகுப்புகளையும், மின்சார சட்டதிருத்தத்தையும் வாபஸ் வாங்க வேண்டும், கவர்னர் என்ற போர்வையில் சனாதனத்தை தூக்கி பிடித்து கொண்டு தமிழ்நாட்டில் விஷ விதைகளை விதைக்கும் ஆளுநர் ரவியை உடனடியாக தமிழ்நாட்டில் இருந்து வெளியேற்ற வேண்டும்,ஆளுநர் மாளிகை அமைந்துள்ள 150 ஏக்கரில் தமிழ்நாடு சட்டமன்றம் உடனடியாக கட்டப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

ஆர்ப்பாட்டத்தில் டயூ.ஆல்பர்ட்வேளாங்கண்ணி, பெரியார் திராவிடர் கழக பெரியார் சாக்ரடீஸ் பெரியார் வட்டக்குழு உறுப்பினர்கள் ஏ.சம்பத், பி. வெங்கடேசன் உட்பட பலர் கலந்து கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முடிவில் வட்ட பொருளாளர் ஜி.சபாபதி நன்றி கூறினார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்