விழுப்புரம் மாவட்டத்தில் இரவில் திடீர் மழை: விவசாயிகள் மகிழ்ச்சி

விழுப்புரம் மாவட்டத்தில் இரவில் திடீர் மழை: விவசாயிகள் மகிழ்ச்சி
X

மாதிரி படம் 

விழுப்புரம் மாவட்டத்தில் பரவலாக திடீரென வெள்ளிக்கிழமை இரவு பெய்த கனமழையால் மக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெய்யிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்தது, மேலும் பகல் நேரத்தில் வீசும் காற்று, இரவு நேரங்களில் வீசாமல் அமைதியானதால் மக்கள் புழுக்கத்தில் தினந்தோறும் தூக்கம் வராமல் அவதி பட்டு வந்தனர்,

மேலும் விவசாயிகள் ஆடி பதினெட்டு விதைக்கும் நாள் என்பதால் விதை தூவி விட்டு மழையை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தனர்.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக விழுப்புரம் மாவட்டத்தில் பரவலாக ஆங்காங்கே கனமழை பெய்வதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் .

Tags

Next Story
வாடகை வீட்டை காலி செய்ய மறுத்ததால் மாநகராட்சி பில் கலெக்டர் மீீது புகார்!