பொய்யே மூலதனமாக கொண்டவர்: முதல்வர் பழனிச்சாமி ஆவேசம்

பொய்யே மூலதனமாக கொண்டவர்: முதல்வர் பழனிச்சாமி  ஆவேசம்
X
இந்த தேர்தலோடு வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்து விடுவார்கள் தமிழக மக்கள். -முதல்வர் பழனிச்சாமி.

விழுப்புரம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் சிவி.சண்முகத்திற்கு விழுப்புரத்தில் வாக்கு கேட்டு வாக்காளர் மத்தியில் முதல்வர் பழனிச்சாமி பேசுகையில்,

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கூட்டணி, வெற்றிக் கூட்டணி. விழுப்புரம் சட்டமன்ற தொகுதியில் 2 முறை வெற்றி பெற்று சிறப்பான திட்டங்களை சட்டமன்றத் தொகுதியில் செயல்படுத்தி மக்களின் அனைத்துக் கோரிக்கைகளையும் நிறைவேற்றினார், திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் ஸ்டாலின் தேர்தல் நேரத்தில் பிதற்றிக் கொண்டிருக்கிறார். தேர்தல் ஜுரம் வந்துவிட்டதால் என்ன பேசுகிறோம், என்ன பேச வேண்டும் என்று தெரியவில்லை அவருக்கு தெரியவில்லை.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியை வெல்ல முடியாது என்று அவருக்குப் புரிந்து விட்டது. இது வலிமையான கூட்டணி தமிழ்நாட்டு மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் கூட்டணி. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணி அனைத்து கட்சியும் ஒன்றிணைந்து ஒரே நோக்கத்தோடு அமைக்கப்பட்டது. திமுக தலைமையில் அமைக்கப்பட்ட கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி. காலத்துக்கு ஏற்றவாறு கூட்டணியை மாற்றிக் கொள்வார்கள், தமிழகத்தில் 30 வருடம் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் ஒரே கட்சி அதிமுக கட்சி மட்டுமே. தமிழகத்தில் அதிக நாட்கள் ஆண்ட கட்சி அதிமுக கட்சி மட்டுமே, தமிழ்நாட்டு மக்களின் ஒட்டுமொத்த அன்பையும் பெற்ற கட்சி அதிமுக கட்சி.

தமிழகத்தில் அனைத்து திட்டங்களை நிறைவேற்றிய அரசு அதிமுக அரசு, தமிழகத்தில் ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரம் உயர்வதற்கு கொடுத்து கொடுத்து சிவந்த கரம் எம்ஜிஆர், அவருக்குப் பிறகு ஜெயலலிதா ஏழை மக்கள் வாழ்வாதாரம் உயர வேண்டும் என்று பாடுபட்டவர். புரட்சித்தலைவி அம்மா அவர்கள், தமிழகத்தில் சிறப்பான ஆட்சி நடந்து கொண்டு இருப்பதை பொறுத்துக் கொள்ள முடியாத திராவிட முன்னேற்ற கழக தலைவர் ஸ்டாலின் பிதற்றுகிறார். பொய் தான் அவரின் மூலதனம். தமிழகத்தில் இந்த தேர்தலோடு திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் மூடு விழா நடைபெறும். ஆட்சியில் இல்லாத திமுக திருந்தவில்லை, இந்த தேர்தலோடு அதற்கு இறுதி முடிவு கட்டிபடும். அதிமுக தொண்டர்கள் நல்ல மனம் படைத்தவர்கள். திமுக தொண்டர்கள் எது செய்தாலும் அது மக்களுக்கு துரோகத்தை இழைக்கும். திமுக வாரிசு அரசியலை முன்னெடுத்துச் செல்கின்றது. கருணாநிதி, ஸ்டாலின் உதயநிதி இவர்கள் வாரிசு அரசியலை முன்னெடுத்துச் செல்கின்றனர் அதற்காகத்தான் மு.க.ஸ்டாலின் தனது மகனுக்கு சீட்டு கொடுத்துள்ளார், இவர் தொண்டர்களையும், தமிழக மக்களை ஏமாற்றுகிறார்.

அதிமுக கட்சியின் அடிமட்டத் தொண்டன் கூட தலைவனாக முடியும், திமுகவில் அப்படி நடக்காது. வாரிசு அரசியல் தான் தலைதூக்கி உள்ளது. அதற்காகத்தான் தன் மகனை தமிழ்நாடு முழுவதும் சுற்றிவர சொல்லியிருக்கின்றார். இந்த தேர்தலோடு வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்து விடுவார்கள் தமிழக மக்கள்.

எடப்பாடி பழனிச்சாமி தனது சொந்தக்காரருக்கு டென்டர் கொடுத்துள்ளார் என்று பொய்யை சொல்கின்றார். ஆனால் நாங்கள் ஓபன் டெண்டர் உங்கள் திமுக காரர்களுக்கு 8 டெண்டர் கொடுத்துள்ளோம். அது கூட தெரியாமல் ஸ்டாலின் பேசி கொண்டிருக்கிறார். மக்களை குழைப்பி அரசியல் நாடகத்தை அரங்கேற்றி வெற்றி பெறலாம் என்ற நினைப்பை ஸ்டாலின் மறந்துவிட வேண்டும். ஸ்டாலினுக்கு பொய் கூட சரியாக பேசத் தெரியாது, எடப்பாடி பழனிச்சாமி ஊர்ந்து சென்று பதவி வாங்கினேன் என்று கூறினீர்கள் அது உண்மை இல்லை, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுத்தால் நான் முதல்வர் ஆனேன். அதைக் கூட பொறுத்துக் கொள்ள முடியாத மு.க.ஸ்டாலின் சட்டம் மன்றத்தில் ரவுடித்தனம், அராஜகம் செய்தது இவர்கள் ஆட்சிக்கு வந்தால் நாடு தாங்குமா?

சபாநாயகர் மாண்பை மதிக்காத கட்சி திமுக கட்சி, இந்திய திருநாட்டில் ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே அரசாங்கம் திமுக அரசாங்கம். ஊழல் பிறந்தது கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது தான். ஊழல் என்பது திமுகவினருக்கு அனைவருக்கும் ஒட்டியுள்ளது. கிராமத்தில் சொல்வார்கள் தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும் என்று சொல்வார்கள் இவர்களின் ஊழல் பழக்கம் வழிவழியாக தொற்றிக் கொண்டுள்ளது.

மக்களை ஏமாற்றுவதில் நம்பர் ஒன் திமுக தலைவர் ஸ்டாலின், தமிழகத்தில் 10 ஆண்டுகாலம் வனவாசம் சென்று விட்டு தற்போது வந்து திமுகவினர் அவதூறுகளை பரப்பி வருகின்றனர். உண்மை தலைமையே வெல்லும் நீதி தான் வெல்லும் இவ்வாறு அவர் பேசினார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!