வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தில் வேலைவாய்ப்பு: ஆட்சியர் தகவல்

வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தில் வேலைவாய்ப்பு: ஆட்சியர் தகவல்
X

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் த. மோகன்

விழுப்புரம் மாவட்டம் வல்லம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இந்தத்திட்டத்தில் தற்காலிக பணிக்கு விண்ணப்பிக்கலாம்

வாழ்ந்து காட்டுவோம் திட்ட மகளிர் வாழ்வாதார சேவை மையத்தில் ஒப்பந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்

தமிழக அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் செயல்பட்டு வரும் விழுப்புரம் மாவட்ட வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மூலம் வல்லம் வட்டாரத்தில் அமைக்கப்படவுள்ள மகளிர் வாழ்வாதார சேவை மையத்திற்கு உற்பத்தியாளர் கூட்டமைப்புகள், உற்பத்தியாளர் குழுக்கள், தொழில் குழுக்கள் மற்றும் தனிநபர் தொழில் முனைவோருக்கு தொழில் திட்டங்கள் மற்றும் நிதி இணைப்பு சார்ந்த பணிகளை மேற்கொள்ள தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் கீழ்க்கண்ட பணியிடங்களுக்கு பணியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

தொழில் முனைவு மேம்பாட்டு அலுவலர் (Enterprise Development Officer),தொழில் முனைவு நிதி அலுவலர் - (Enterprise Finance Officer) ஆகிய பணிகளுக்கு முதுகலை பட்டம் தேர்ச்சி அடைந்தவராக இருத்தல் வேண்டும்.கணினி பயன்பாடு அறிந்தவராக இருத்தல் வேண்டும். 40 வயதுக்குள் இருக்க வேண்டும். தொழில் முனைவுகள் தொடர்பான அனுபவமிக்கவராக இருக்க வேண்டும்,தொழில்முனைவோர்களுக்கு தேவையான தொழில் திட்டம், வங்கி இணைப்பு ஏற்படுத்தி தருவதில் அனுபவமிக்கவராக இருக்க வேண்டும்.பெண்கள் மற்றும் சமூகத்தில் பின் தங்கிய வகுப்பினருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.தொழில் நிறுவனங்களை வலுப்படுத்த தேவையான சார்பு பணிகளை மேற்கொள்வதில் அனுபவமிக்கவராக இருக்க வேண்டும்.

ஆலோசகர் பணிக்கு 30 வயதிற்கு மேல் இருக்க வேண்டும். குறைந்தபட்சம் 12-ம் வகுப்பு தேர்ச்சி, தொழில் பற்றிய புரிதல் மற்றும் தொழில் திட்டம்,சந்தைப்படுத்துதல் ஆகியவற்றில் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள்,முன் அனுபவம் வாய்ந்தவராக இருக்க வேண்டும்.மாதத்திற்கு அதிகபட்சமாக 7 வேலை நாட்கள் மற்றும் நாள் ஒன்றுக்கு ரூ 700 வீதம் வழங்கப்படும்.செயல்பாட்டு நிபுணர் (Functional Expert) இப்பணியிடத்துக்கு 30 வயதிற்கு மேல் இருக்க வேண்டும்.

ஓய்வு பெற்ற வங்கியாளர், வழக்கறிஞர், காப்பீட்டு ஆலோசகர், வரி ஆலோசகர், நிதி ஆலோசகர், பட்டய கணக்காளர் போன்றதுறைகளை சார்ந்தவர்களாக இருக்க வேண்டும். குறைந்தபட்சம் துறைசார்ந்த பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். தொழில் பற்றிய புரிதல் மற்றும் தொழில் திட்டம், சந்தைப்படுத்துதல் ஆகியவற்றில் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் முன் அனுபவம் வாய்ந்தவராக இருக்க வேண்டும். மாதத்திற்கு அதிகபட்சமாக 7 வேலை நாட்கள் மற்றும் நாள் ஒன்றுக்கு 700 வீதம் வழங்கப்படும்.

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள், மாவட்ட செயல் அலுவலர், வாழ்ந்து காட்டுவோம் திட்டம் விழுப்புரம் மாவட்ட திட்ட மேலாண்மை அலகு, 367 ஹாஜி உஸ்மான் கட்டிடம் முதல் தளம், சுதாகர் நகர், விழுப்புரம் மாவட்டம்-605602, தொடர்பு எண்: 04146 290207 என்ற முகவரியில் பெற்று பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை ஜீலை-20-ம் தேதி மாலை 5 மணிக்குள் நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ சமர்ப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் த.மோகன் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story