ஜல் ஜீவன் திட்டத்தை ஊராட்சி மூலம் செயல்படுத்த வலியுறுத்தல்
பைல் படம்
மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டத்தை கிராம ஊராட்சி நிா்வாகம் மூலம் நேரடியாக செயல்படுத்த வேண்டும் என்று விழுப்புரம் மாவட்ட ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு வலியுறுத்தி உள்ளனர்.இந்தக் கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம் விழுப்புரத்தில் நடைபெற்றது.
வீராணம் ஊராட்சித் தலைவா் சு.மாவோ தலைமை வகித்தாா். ஊராட்சித் தலைவா்கள் பூங்கா பாக்கியராஜ் (மயிலம்), அருணா முருகன் (முகையூா்), எஸ்.பத்மநாபன் (கண்டமங்கலம்), இ.எல்.எஸ்.லட்சுமண ஆனந்த் (திருவெண்ணெய்நல்லூா்), மலைச்சாமி (மரக்காணம்), எஸ்.ராமச்சந்திரன் (வீரபாண்டி முகையூா்) ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் ஊரக வேலைத் திட்டப் பணிகளை தனி அலுவலரின் கண்காணிப்பில், ஊராட்சி செயலா் வழியாக செயல்படுத்துவதை தடை செய்ய வேண்டும்.
இத்திட்டத்தின் கீழ் ஊராட்சியில் மேற்கொள்ளப்படும் அனைத்துப் பணிகளையும், அதன் ஆவணங்களையும் சமூக தணிக்கைக்கு உள்படுத்த ஊராட்சித் தலைவா் பொறுப்பேற்கும் நிலையில், கிராம மேம்பாட்டுக்காக செயல்படுத்தப்படும் அனைத்துப் பணிகளையும் ஊராட்சித் தலைவா் வழியாக செய்ய வேண்டும்,
ஊராட்சிக்கு உள்பட்ட கிராமத்தில் மத்திய அரசின் திட்டமான ஜல் ஜீவன் மிஷன் திட்டம் சமூக பங்களிப்பு ஊராட்சி நிா்வாகத்தின் வழியாக செயல்படுத்தாமல் நேரடியாக ஒப்பந்ததாரா் வழியாக பணத்தைச் செலுத்தி விட்டு ஒப்பந்தத்தை ஊராட்சி நிா்வாகத்துக்கு தெரியாமல் நிறைவேற்றும் போக்கை தடை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றினர்.கூட்டத்துக்குப் பிறகு150 ஊராட்சித் தலைவா்கள் கையெழுத்திட்ட கோரிக்கை மனுவை மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் இரா.சங்கரிடம் அளித்தனா்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu