சுமைப்பணி தொழிலாளர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு

சுமைப்பணி தொழிலாளர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு
X
Election of new executives of the Burden Workers Union

விழுப்புரத்தில் இன்று நடைபெற்ற சுமைப்பணி தொழிலாளர் சங்கத்தின் கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

விழுப்புரம் சிஐடியு மாவட்ட அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை தமிழ்நாடு சுமைப்பணி தொழிலாளர் சங்கத்தின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது, கூட்டத்திற்கு எம்.பழனி தலைமை வகித்தார். கூட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் ஆர்.வேங்கடபதி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

கூட்டத்தில் டாஸ்மாக் குடோனில் பணி செய்யும் சுமைப்பணி தொழிலாளர்களுக்கு ஏற்று கூலி உயர்த்தி வழங்க வேண்டும், செஞ்சி மார்கெட் கமிட்டியில் வெய்யில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு ஜெட் அமைத்து தரவேண்டும், மேலும் கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன, கூட்டத்தில் மாவட்ட தலைவராக எம்.பழனி, மாவட்ட பொதுச்செயலாளராக பி.குமார், பொருளாளராக பி.ஏழுமலை உட்பட 15 பேர் கொண்டவர்கள் புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர்.



Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!