விழுப்புரம் மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி

விழுப்புரம் மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி
X

மாதிரி படம் 

விழுப்புரம் மாவட்டத்தில் அமைக்கப்பட்ட பறக்கும் படை பல்வேறு பொருட்கள், பணம் உள்ளிட்டவைகள் பறிமுதல் செய்தனர்.

விழுப்புரம் மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் 2021 தொடர்பாக மாவட்ட ஆட்சியரால் அமைக்கப்பட்ட 18 தேர்தல் சிறப்பு பறக்கும் படை குழுவினர் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர்.

07.10.2021 தேதி வரை ரூ.57,08,602 மதிப்புள்ள 18486 மதுபான பாட்டில்கள், உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்பட்ட ரொக்க தொகை ரூ.24,72,600/ மற்றும் ரூ.9,23,150/- மதிப்புள்ள ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்பட்ட அரிசி, புடவைகள், டவல்கள், எவர்சில்வர் பாத்திர வகைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இது தொடர்பாக 347 நபர்கள் மீது காவல்துறையினர் மூலம் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்