வேலை வாங்கி தருவதாக மோசடி: மின் ஊழியர் சஸ்பென்ட்

வேலை வாங்கி தருவதாக மோசடி: மின் ஊழியர் சஸ்பென்ட்
X
விழுப்புரம் மின்துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்த மின் ஊழியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

விழுப்புரம் கீழ்பெரும்பாக்கத்தைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவருக்கு கடலுார் மாவட்டம், நல்லாத்தூரைச் சேர்ந்த பிரவீன் குமாருடன் 2017ல் பழக்கம் ஏற்பட்டது. அப்போது வெங்கடேசன், விழுப்புரம் மின்வாரிய தலைமை பொறியாளர் அலுவலக நிர்வாக பிரிவில் அலுவலக உதவியாளராக பணிபுரிவதாக கூறினார்.

அப்போது ஐ.டி.ஐ., படித்துள்ள தனது சகோதரர் கமலக் கண்ணன் என்பவருக்கு மின் வாரியத்தில் வேலை வாங்கித் தரவேண்டும் என பிரவீன் குமார் கேட்டு உள்ளார், அதற்கு வெங்கடேசன் பணம் ரூ. 3.30 லட்சம் கேட்டு உள்ளார்,

இதையடுத்து, ஒரு லட்சம் ரொக்கமாகவும், 2 லட்சம் ரூபாய் 2 காசோலைகளாக பிரவீன் குமார்கொடுத்து உள்ளார், ஆனால், அவர் வேலை வாங்கித்தராமல் மோசடி செய்து உள்ளார், இது குறித்து வெங்கடேசன் மீது விழுப்புரம் டவுன் போலீசில் புகார் கொடுத்ததன்பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் புகார் மீது துரித நடவடிக்கை இல்லை என்பதால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ நாதாவிடம் புகார் மனு கொடுத்தனர், இதனையடுத்து கண்டமங்கலத்தில் பணிபுரியும் வெங்கடேசனை விழுப்புரம் மின்துறை சஸ்பென்ட் செய்து உத்தரவிட்டது.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil