ஆணவ படுகொலைக்கு தனிசட்டம் இயற்ற ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் வலியுறுத்தல்

ஆணவ படுகொலைக்கு தனிசட்டம் இயற்ற ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் வலியுறுத்தல்
X

ஆணவக்கொலைக்கு தனி சட்டம் இயற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் 

ஆணவ படுகொலைக்கு எதிராக தனி சட்டம் இயற்ற வேண்டும் என வலியுறுத்தி விழுப்புரத்தில் வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

விழுப்புரத்தில் ஆணவ படுகொலைக்கு தனி சட்டம் ஏற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ்.பிரகாஷ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சே.அறிவழகன், நாட்டில் பெருகி வரும் சாதிய ஆணவப் படுகொலையை தடுக்க மத்திய அரசு உடனடியாக தனி சட்டம் இயற்ற வேண்டும், பெண்கள், குழந்தைகளுக்கு எதிராக பெருகி வரும் பாலியல் வன்கொடுமைகளை அரசு இரும்பு கரம் கொண்டு தடுக்க வேண்டும் என வலியுறுத்தி பேசினார்.

மாவட்ட பொருளாளர் எஸ்.பார்த்திபன் மாவட்ட துணைத் தலைவர்கள் தேவநாதன், எஸ்.பாலமுருகன், மாவட்ட துணைச்செயலாளர் ஹரிகர குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.நாகராஜ், ஜெ.வேலு, மாவட்ட குழு உறுப்பினர்கள் ஆர்.கிருஷ்ணராஜ், ஐ.முருகன், பி.வேங்கடபதி, உட்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!