மத்திய அரசுக்கு எதிராக விழுப்புரத்தில் வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசுக்கு எதிராக விழுப்புரத்தில் வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
X

மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் 

விழுப்புரத்தில் மத்திய அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தி தேசிய தலைவர்கள் உருவப்படம் அணிந்து உறுதியேற்பு நிகழ்ச்சியில் ஈடுபட்டனர்

டெல்லியில் நடைபெற்ற குடியரசு தின அணி வகுப்பில் தமிழக விடுதலை போராட்ட வீரர்களை நிராகரித்த மத்திய அரசை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விழுப்புரம் காந்தி சிலை முன்பு விடுதலை போராட்ட வீரர்களின் தியாகத்தை போற்றும் வகையில் அவர்களின் உருவப்படத்தை அணிந்து உறுதியேற்பு எடுக்கும் நிகழ்ச்சி மாவட்ட தலைவர் எஸ்.பிரகாஷ் தலைமையில் நடைபெற்றது,

நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் கிருஷ்ணராஜ், கண்டாச்சிப்புரம் வட்ட தலைவர் தீர்த்தமலை உட்பட பலர் கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பி உறுதி ஏற்றனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!