விழுப்புரத்தில் வீடுவீடாக தடுப்பூசி : ஆட்சியர் தொடங்கி வைத்தார்

விழுப்புரத்தில் வீடுவீடாக தடுப்பூசி : ஆட்சியர் தொடங்கி வைத்தார்
X

விழுப்புரம் நகராட்சி பகுதிகளில் வீடு வீடாக தடுப்பூசி போடும் பணியை மாவட்ட கலெக்டர் மோகன் தொடங்கி வைத்தார்.

விழுப்புரம் நகராட்சி பகுதிகளில் வீடு வீடாக தடுப்பூசி போடும் பணியை மாவட்ட ஆட்சியர் மோகன் இன்று தொடங்கி வைத்தார்.

விழுப்புரம் :

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதற்காக சுகாதாரத்துறை மற்றும் உள்ளாட்சி நிர்வாகங்கள் முடிக்கிவிடப்பட்டுள்ளன.

அந்த வகையில் விழுப்புரம் மாவட்டம்,விழுப்புரம் நகராட்சி பகுதிகளில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் வீடு வீடாக சென்று தடுப்பூசி போடும் பணி நடக்கவுள்ளது. இதனை மாவட்ட ஆட்சியர் மோகன் இன்று தொடங்கி வைத்தார். அப்போது நகராட்சி ஆணையர் சுரேந்திர ஷா உட்பட பலர் உடனிருந்தனா்.

Tags

Next Story
future ai robot technology