விழுப்புரம் மாவட்ட பஞ்சாயத்து தலைவராக திமுகவின் ஜெயசந்திரன் தேர்வு

விழுப்புரம் மாவட்ட பஞ்சாயத்து தலைவராக திமுகவின் ஜெயசந்திரன் தேர்வு
X

ஜெயசந்திரன் 

விழுப்புரம் மாவட்டத்தில் மாவட்ட பஞ்சாயத்து தலைவராக, திமுகவை சேர்ந்த ஜெயசந்திரன் தேர்வு செய்யப்பட்டார்.

விழுப்புரம் மாவட்டத்தில், அண்மையில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில், 28 மாவட்ட கவுன்சிலர் போட்டியில் திமுக கூட்டணி, 27 இடங்களில் வெற்றி பெற்றது; அதிமுக ஒரு இடத்தில் வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற கவுன்சிலர்கள், கடந்த 21 ந்தேதி பதவியேற்றுக் கொண்டனர்.

இந்நிலையில், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தேர்வு இன்று, விழுப்புரம் மாவட்ட பஞ்சாயத்து அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், திமுகவை சேர்ந்த மாவட்ட அவைத்தலைவர் ஜெயசந்திரன், மாவட்ட பஞ்சாயத்து தலைவராக தேர்வு செய்யப்பட்டு, பதவி ஏற்றுக் கொண்டார்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!