திமுக தேர்தல் வாக்குறுதி அளித்தபடி நெல் கரும்பு விலையை உயர்த்த வேண்டும்

திமுக தேர்தல் வாக்குறுதி அளித்தபடி நெல் கரும்பு விலையை உயர்த்த வேண்டும்
X
DMK Election Vakkuruthi 2021 in Tamil-திமுக தேர்தல் வாக்குறுதிப்படி நெல் கரும்பு ஆகியவற்றின் விலையை உயர்த்த வழங்க வேண்டும் என விழுப்புரம் விவசாயிகள் கோரிக்கை

DMK Election Vakkuruthi 2021 in Tamil-சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கொடுத்த வாக்குறுதியின்படி நெல், கரும்பு ஆகியவற்றுக்கான கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோருக்கு, இச்சங்கத்தின் மாவட்டத் தலைவர் எம்.ஐ.சகாபுதீன், மாவட்டச் செயலர் ஆர்.கலியமூர்த்தி ஆகியோர் மனு அனுப்பியுள்ளனர்.

தமிழக ஆளும் திமுக அரசு சட்டப்பேரவைத் தேர்தலின்போது விவசாயிகளுக்கு கொடுத்து வாக்குறுதியான நெல்குவிண்டால் ரூ.2,500, கரும்பு டன் ரூ.4,500 (9.5 பிழிதிறன்) விலை நிர்ணயம் செய்து உடனடியாக வழங்க வேண்டும். மத்திய அரசு விவசாயிகளிடம் உறுதி அளித்ததற்கு மாறாக ஜூலை 8}ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து எரிசக்தி நிலை குழுவுக்கு அனுப்பியுள்ள மின் சட்ட திருத்த மசோதா 2022 -ஐ திரும்பப் பெறுவதுடன் நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும்.

தேங்காய் விளைச்சல் சீராக இருந்தும், வெளிமாநிலம் செல்வது குறைந்ததால் கடந்த பல மாதங்களாக கட்டுப்படியான விலை இல்லை. இந்நிலையில் மாநிலஅரசு கொப்பரை கொள்முதல் செய்வதை நீட்டித்துள்ளது வரவேற்புக்குரியது. இருப்பினும் கொப்பரை கிலோவுக்கு ரூ.150 விலை நிர்ணயம் செய்ய வேண்டும். சிறு, குறு விவசாயிகள் பயன்பெறுவதற்கு கேரள அரசு போல் உரித்த தேங்காய்களை கிலோவுக்கு ரூ.50 விலை நிர்ணயம் செய்து வட்டாரத்துக்கு ஓர் இடத்தில் கொள்முதல் செய்ய வேண்டும். 2021-2022 சம்பா தாளடி நெல் பருவ காப்பீடு திட்ட விவரங்களை வெளியிட்டு உரியவர்களுக்கு உரிய காப்பீடு தொகையை வழங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.

மேலும், மாவட்ட ஆட்சியர் த.மோகனிடம், இச்சங்கத்தின் மாவட்டச் செயலர் கலியமூர்த்தி வியாழக்கிழமை அளித்த மனுவில், விழுப்புரம் மாவட்டத்தில் 2022-ஆம் ஆண்டு செயல்பட்ட நெல் கொள்முதல் மையங்களை ரத்து செய்து, 2023-ஆம் ஆண்டில் நுகர்பொருள் வாணிக கழகத்தின் மூலம் 2022-ஆம் ஆண்டில் செயல்பட்ட தவிர்த்து, புதிய கிராமங்களை தேர்வு செய்து நேரடி கொள்முதல் மையங்களை திறக்க வேண்டும் என கலியமூர்த்தி தெரிவித்துள்ளார் .


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
Weight Loss Tips In Tamil