விழுப்புரத்தில் திமுக தேர்தல் விருப்ப மனு

தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்த திமுகவினர்.
DMK Latest News in Tamil - தி.மு.க. 15-வது பொதுத்தேர்தல் ஒன்றிய செயலாளர்கள், நிர்வாகிகள் தேர்தல் விருப்ப மனு கலைஞர் அறிவாலயத்தில் பெற்றனர். இந்நிகழ்ச்சியில் முன்னாள் மதுரை மேயரும், தலைமைகழக பிரதிநிதி, தேர்தல் ஆணையாளருமான குழந்தைவேல் கலந்துகொண்டு விழுப்புரம் மத்திய மாவட்ட த்தில் உள்ள வானூர் கிழக்கு ,வானூர் மேற்கு, கிளியனூர் கண்டமங்கலம் கிழக்கு, கண்டமங்கலம் மத்திய, கண்டமங்கலம் மேற்கு, விக்கிரவாண்டி கிழக்கு, விக்கிரவாண்டி மத்திய , விக்கிரவாண்டி மேற்கு, காணை வடக்கு, காணை மத்திய, காணை தெற்கு, கோலியனுர் கிழக்கு, கோலியனூர் மேற்கு, கோலியனூர் தெற்கு, முகையூர் வடக்கு, முகையூர் தெற்கு, மணம்பூண்டி, திருக்கோவிலூர் கிழக்கு, திருவெண்ணெய்நல்லூர் மேற்கு ஆகிய ஒன்றிய தி.மு.க. செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் தேர்தல் நடைபெறவுள்ளதால், மேற்கண்ட ஒன்றியங்களில் போட்டியிடும் விருப்பமுள்ள திமுக பிரதிநிதிகளுக்கு விருப்ப மனுக்களை வழங்கினார்.
இதில் ஒன்றிய தி.மு.க. நிர்வாகிகள் ஆர்வத்துடன் விருப்ப மனுக்களை பெற்று பூர்த்தி செய்து மீண்டும் மனுக்களை தேர்தல் ஆணையரிடம் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் புகழேந்தி எம்.எல்.ஏ., மாவட்ட அவைத்தலைவர் ஜெயசந்திரன், மாவட்ட பொருளாளர் ஆர்.ஜனகராஜ், மாவட்ட துணை செயலாளர்கள் முன்னாள் எம்எல்ஏ செ.புஷ்பராஜ், மைதிலி ராஜேந்திரன், முருகன், மாநில விவசாய அணி அன்னியூர் சிவா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu