விழுப்புரத்தில் திமுக வேட்பாளர் தீவிர பிரசாரம்
X
By - P.Ponnusamy, Reporter |31 March 2021 1:30 PM IST
விழுப்புரத்தில் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் லட்சுமணன் தீவிர பிரசாரம் செய்து வாக்கு சேகரித்தார்.
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் ஆதரவு பெற்ற, விழுப்புரம் சட்டமன்ற தொகுதியின் திமுக வேட்பாளர் டாக்டர் லட்சுமணன் விழுப்புரம் நகரத்தில்14. 15.வது வார்டுகளாகிய அருந்ததியர் தெரு, நந்தனார் தெரு ஆகிய இடங்களில் வீதி, வீதியாக உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார்.
அப்போது வேட்பாளர் டாக்டர் லட்சுமணனுக்கு அப்பகுதி இளைஞர்கள் மற்றும் மக்கள் மாலை அணிவித்து வரவேற்றனர்,மாவட்ட கழக பொருளாளர் இரா.ஜனகராஜ், மாவட்ட கழக துணை செயலாளர் செ.புஷ்பராஜ், நகர கழக செயலாளர் இரா.சக்கரை, கழக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu