விழுப்புரத்தில் விலைவாசி உயர்வை கண்டித்து தே.மு.தி.க. ஆர்ப்பாட்டம்

விழுப்புரத்தில் விலைவாசி உயர்வை கண்டித்து தே.மு.தி.க. ஆர்ப்பாட்டம்
X

விலைவாசி உயர்வை கண்டித்து விழுப்புரத்தில்  தே.மு.தி.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விலைவாசி உயர்வை கண்டித்து தே.மு.தி.க. வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று ஜூலை 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்ட தே.மு.தி.க. சார்பில் மத்திய மாநில அரசுகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு மக்களின் அடிப்படை பொருட்களின் விலை உயர்வுகளை கண்டித்து நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தே.மு.தி.க. முன்னாள் எம்.எல்.ஏ. வெங்கடேசன் தலைமை தாங்கினார். பெட்ரோல், டீசல்,மின்சார கட்டணம் உயர்வு ஆகியவற்றை கண்டித்து கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான தே.மு.தி.க.வினர் கலந்துகொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.

Tags

Next Story
ai as the future