விழுப்புரத்தில் மாவட்ட அளவில் மருந்தாளுனர்களுக்கான பயிற்சி முகாம்
விழுப்புரத்தில் மருந்தாளுனர்களுக்கு மாவட்ட அளவிலான பயிற்சி முகாம் நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்ட மருந்து வணிகர்கள் சங்கம் மற்றும் மாவட்ட மருதாளுனர்கள் சங்கம் சார்பில் பார்மசிஸ்ட்களுக்கான கருத்தரங்கம், பயிற்சி முகாம் விழுப்புரத்தில் நடைபெற்றது.
முகாமிற்கு மருந்தாளுநர்கள் சங்க மாவட்ட தலைவர் சத்தியசீலன் தலைமை தாங்கினார். மருந்து வணிகர்கள் சங்க மாவட்ட தலைவர் சின்னையா, மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன், மாவட்ட பொருளாளர் சவுந்தரராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக கண்டாச்சிபுரம் நிர்வாகி விஜயஆனந்த் வரவேற்றார்.
முகாமில் ஓய்வு பெற்ற மருந்து கட்டுப்பாட்டு துறை உதவி இயக்குநர் ஜெயராஜ், திண்டிவனம் சரக மருந்து ஆய்வாளர் சுகன்யா, அரசு மருத்துவர்கள் பாக்கியலட்சுமி, ரவிக்குமார், மதன்ராஜ், விஷ்ணுகுமரன், சுமித்ரா, மருந்தாளுநர்கள் சங்க மாநில செயலாளர் வேங்கடசுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டு கருத்துரைகள் வழங்கி பேசினர்.
திண்டிவனம் சரக மருந்து ஆய்வாளர் சுகன்யா கலந்து கொண்டு பேசுகையில், தற்போது நமது நாட்டில் புதிதாக பரவி வரும் நோய்கள் குறித்தும், அவற்றுக்கு வழங்கப்படும் மாத்திரைகளால் ஏற்படும் பக்கவிளைவுகளை தவிர்க்கும் வகையில் மாத்திரைகளை பரிந்துரைக்க வேண்டும். நோய் எதிர்ப்பு மருந்துகளின் வீரீயம், வருங்காலத்தில் நோய்களால் ஏற்படும் பாதிப்புகளை விட ஆண்டிபயாட்டிக்ஸ் பயன்படுத்துவதால் அதிக பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது. மேலும் இதுபோன்று கருக்கலைப்பு மாத்திரைகளை மருத்துவர் ஆலோசனை பெறாமல் கடைகளில் விற்கக் கூடாது, இதனால் அதிக பாதிப்புகள் ஏற்படுகிறது. அதிக உதிரப்போக்கினால் உயிரிழப்புகள் கூட பல நேரங்களில் நடக்கிறது. எனவே கருக்கலைப்பு செய்வது குறித்து மகப்பேறு நல மருத்துவரின் ஆலோசனை பெறாமல் சிகிச்சை எடுத்துக் கொள்ளக் கூடாது. மருந்தாளுநர்கள், நோயாளிகள் இடையேயான புரிதல் இருக்க வேண்டும் என்றார்.
இந்த முகாமில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மருந்தாளுநர்கள் கலந்து கொண்டனர். முடிவில் நிர்வாகி அண்ணாமலை நன்றி கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu