விழுப்புரத்தில் வங்கி அரங்குகளை பார்வையிட்ட மாவட்ட கலெக்டர்

விழுப்புரத்தில் வங்கி அரங்குகளை  பார்வையிட்ட  மாவட்ட கலெக்டர்
X
அனைத்து வங்கிகளுடன் இணைந்து இந்தியன் வங்கி (முன்னோடி வங்கி) நடத்திய மாபெரும் வாடிக்கையாளர் தொடர்பு முகாமை நடத்தியது

விழுப்புரத்தில் நடைபெற்ற வங்கி வாடிக்கையாளர்கள் தொடர்பு முகாமில் அமைக்கக்கப்பட்டிருந்த அரங்குகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.

விழுப்புரம் கரும்பு விவசாயிகள் திருமண மண்டபத்தில் அனைத்து வங்கிகளுடன் இணைந்து இந்தியன் வங்கி (முன்னோடி வங்கி) நடத்திய மாபெரும் வாடிக்கையாளர் தொடர்பு முகாமை மாவட்ட கலெக்டர் த.மோகன் நேற்று குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து, பார்வையிட்டார். இந்தியன் வங்கி கள பொது மேலாளர் ஜி.ராஜேஷ்வர ரெட்டி, இந்தியன் வங்கி புதுவை மண்டல மேலாளர் செந்தில்குமார், பாரத ஸ்டேட் வங்கி பிராந்திய மேலாளர் கே.சீத்தாராமன், விழுப்புரம் முன்னோடி வங்கி மேலாளர் ஹரிஹரசுதன் மற்றும் அனைத்து வங்கி அலுவலர்கள் பலர் உடனிருந்தனா்.

Tags

Next Story
அசைக்க முடியாத அடையாளம்..!திருச்செங்கோட்டில் 60-அடி திமுக கொடிக்கம்பம்..!