பள்ளி வாகனத்தில் முதலுதவி பெட்டிகள் இருப்பு குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு

பள்ளி வாகனத்தில் முதலுதவி பெட்டிகள் இருப்பு குறித்து மாவட்ட  ஆட்சியர்  ஆய்வு
X

பள்ளி வாகனங்களை விழுப்புரம் மாவட்ட கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்

விழுப்புரம் மாவட்டத்தில் இயங்கிவரும் பள்ளிகளின் வாகனங்களில் முதலுதவி பெட்டிகள் உள்ளதா என மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்தார்.

விழுப்புரம் மாவட்டத்தில் இயங்கி வரும் பள்ளிகளின் வாகனங்களை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.

விழுப்புரம் மாவட்டம், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள மைதானத்தில், விழுப்புரம் வட்டார போக்குவரத்துத்துறை அலுவலகத்தின் சார்பில் நடைபெற்ற பள்ளி மற்றும் கல்லூரி பேருந்து ஆய்வு முகாமில், பேருந்தில் மருத்துவ முதலுதவி பெட்டகம் மற்றும் தீயணைப்புக் கருவி வைக்கப்பட்டுள்ளதா என்பதை மாவட்ட கலெக்டர் த. மோகன், இன்று (24.2.2021) நேரில் ஆய்வு மேற்கொண்டார். மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை அலுவலர் ராபின்காஸ்ட்ரோ, விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் அரிதாஸ், விழுப்புரம் வட்டார போக்குவரத்து அலுவலர் ஆர்.வெங்கடேசன் ஆகியோர் உட்பட பலர் உடனிருந்தனா்.


Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!