வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு கேட்டு மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு கேட்டு மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
X

விழுப்புரத்தில்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள்

வேலைவாய்ப்பில் 5 சதவீதம் ஒதுக்க வலியுறுத்தி விழுப்புரத்தில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

2016 ல் கொண்டுவரப்பட்ட வேலைவாய்ப்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு சமவாய்ப்பு கொள்கையை அரசாணைபடி அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் 5 சதவீத வேலை வழங்க வலியுறுத்தி தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில், மாற்றுத்திறனாளிகள் குடும்பத்துடன் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்திற்கு சங்கத்தின் மாநிலக்குழு உறுப்பினர் வி.ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். போராட்டத்தில் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் நம்புராஜன் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்,

அதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு ஊர்வலமாக வந்து மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனுக்களை கொடுத்தனர். மனுவை பெற்றுக்கொண்ட ஆட்சியர் மோகன் ஒரு வாரத்தில் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார், அதனை தொடர்ந்து தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்கான சங்கத்தினர் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Tags

Next Story