மாற்றுத்திறனாளிகளை அவமானப்படுத்திய நடத்துநர்

மாற்றுத்திறனாளிகளை அவமானப்படுத்திய நடத்துநர்
X

மாற்றுத்திறனாளிகளிடம்  மரியாதை குறைவாக நடந்து கொண்ட அரசு பேருந்து நடத்துநர் 

விழுப்புரம் அரசு பேருந்தில் மாற்றுதிறனாளிகளை அவமானப்படுத்திய நடத்துநர் மீது நடவடிக்கை எடுக்க மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் கோரிக்கை

கடந்த சில நாட்களுக்கு முன்பு சுமார் மூன்று மணி அளவில் கண்டமங்கலத்தில் இருந்து விழுப்புரம் நகரத்திற்கு தடம் எண்.1. பேருந்தில் டி.என்.32,3762) மாற்றுத்திறனாளிகள் மாவட்ட தலைவர் மாற்றுத் திறனாளி முருகன் மற்றும் அவருக்கு துணையாளராக மாவட்ட துணை தலைவர் மாற்றுத் திறனாளி அல்லாத வி. ராதாகிருஷ்ணன் ஆகியோர் டி.என்.32,3762 என்ற அரசு பேருந்தில் பயணம் செய்துள்ளனர். .

மாற்றுத்திறனாளியாகிய முருகனுக்கும் அவரின் துணையாளர் ராதாகிருஷ்ணனுக்கும், கட்டணமில்லா பயண சீட்டு கேட்டதற்கு மாற்றுத்திறனாளி முருகனுக்கு மட்டும் பயண சீட்டு கொடுத்துவிட்டு, துணையாளர் ராதாகிருஷ்ணனுக்கு கட்டணமில்லா பயண சீட்டு வழங்க நடத்துநர் மறுத்துள்ளார்.

மேலும், துணையாளர் பாஸ் காண்பிக்க வேண்டும் எனவும் கேட்டுள்ளார். அரசு உத்தரவை காண்பித்தபோதும் அதை நடத்துநர் படிக்க மறுத்துள்ளார். இது குறித்து போக்குவரத்து அதிகாரிகளை தொடர்பு கொண்டு விளக்கம் பெறுங்கள் என பொறுமையாக எடுத்து சொல்லியும் கேட்க மறுத்ததோடு, ஒருமையிலும், அநாகரிகமாகவும் கத்தியுள்ளார். அவருடன் ஓட்டுநரும் சேர்ந்து கொண்டு கத்தியுள்ளார்.

இது குறித்து தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாநில பொது செயலாளர் எஸ்.நம்புராஜன் கூறுகையில், கடந்த 12/01/2022 அன்று தங்கள் தலைமை அலுவலகம் முன்பாக 600-க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் கலந்துகொண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினோம். அப்போது நடத்துநர், ஓட்டுநகளுக்கு உரிய வழிகாட்டுதல்கள் வழங்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் வாக்குறுதி அளித்தனர். ஆனால், வாக்குறுதிக்கு மாறாக இப்படிப்பட்ட ஊழியர்கள், அரசு உத்தரவுக்கு மாறாக மாற்றுத் திறனாளிகளை துன்புறுத்தி வருவது தெரிய வருகிறது.

இந்த அரசு உத்தரவை அனைத்து உள்ளூர் பேருந்துகளிலும் நடத்துநர் ஓட்டுநர் இருக்கைக்கு மேல் ஒட்டி, விதிமுறைகள் படி ஊழியர்கள் நடக்க பயிற்சி அளிக்கவும், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்வதோடு மாற்றுத் திறனாளிகளை தேவையற்ற போராட்டங்களை மேற்கொள்ளாமல் பார்த்துக் கொள்ளவும் கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நடத்துநர் மற்றும் ஓட்டுநர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விழுப்புரம் அரசு போக்குவரத்து கழக 9445021217 எண்ணிற்கு தொடர்பு கொண்டு கேட்டபோது, அங்கு தொடர்பை எடுத்த கண்ரோல் ரூம் அலுவலர் விண்சென்ட் இது குறித்து புகார் பிரிவுக்கு அந்த நடத்துநர் ஓட்டுனர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், அதன் விளைவாக அந்த நடத்துநருக்கு இரண்டு நாள் பணி தடை கொடுத்து, பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாக தகவல் தெரிவித்தார்.

Tags

Next Story