பேயிடம் பிடிங்கி பிசாசுவிடம் கொடுத்து விடாதீர்கள்: டிடிவி.தினகரன்
![பேயிடம் பிடிங்கி பிசாசுவிடம் கொடுத்து விடாதீர்கள்: டிடிவி.தினகரன் பேயிடம் பிடிங்கி பிசாசுவிடம் கொடுத்து விடாதீர்கள்: டிடிவி.தினகரன்](https://www.nativenews.in/h-upload/2021/03/23/990528-img2021032318443400.webp)
விழுப்புரம் மாவட்டத்தில் 7 தொகுதிகளில் போட்டியிடும் அமமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள நகராட்சி மைதானத்தில் மக்கள் மத்தியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அமமுக கட்சியின் டிடிவி.தினகரன் பேசுகையில், இங்கே ஒருத்தர் தள்ளாடிக் கொண்டே இருப்பாரே, அவரை தள்ளாடவரை தள்ளாடரான் என்று தான் சொல்ல முடியும். கோபப்படக்கூடாது, கோபம் ஆகாது தம்பி, சோ அண்ட் சோ ரூ.200 கோடி பத்திரமா வைத்திருக்கிறார்கள், நிதானம் தம்பி வாங்கிட்டு கதையை முடியுங்கள்.
ஆர்கே நகரில் தெருவுக்கு தெரு, வீட்டுக்கு வீடு நோட்டீஸ் கொடுப்பது ரூ.6 ஆயிரம் கொடுத்தார்கள் என்ன ஆச்சு மக்கள் வாங்கிகிட்டு பட்டை நாமம் போட்டார்கள். எடப்பாடி நாம ஆட்சிக்கு வரமாட்டோம் என்று தெரிந்தோ என்னவோ,6 லட்சம் கோடி கடன் வாங்கி கஜானாவை கழுவி வைத்துள்ளார். வரவன் மாட்டி கொள்ளட்டும் என்று, அதில் தான் ரூ.200 கோடி இறங்க போகிறது கடன் வாங்க டாடா, பிர்லா திண்டிவனத்தில் இவர்கள் வாசலில் காத்துக் கிடக்கிறார்கள், அண்ணன் தானே வரவு செலவு, ஒரு ஆளு சம்பாதிக்கிறார், ஒருத்தர் கணக்கு வழக்குகளை பார்க்கிறார், நீட் தேர்வு, காவேரி ஆணையம், மீத்தேன் எல்லாத்துக்கும் காரணம் திமுக, ஆனா எதிர் கட்சியாக இருக்கும் போது ஒன்று பேசுவார், ஆளும் கட்சியாக இருந்தால் அப்படியே மாத்தி பேசுவார், பேயிக்கு பயந்து பிசாசு கிட்ட விட்டுராதீங்க, மக்களாகிய நீங்கள் தான் யார் ஆட்சிக்கு வரவேண்டும் என்று தீர்மானிக்கும், முதியோர் உதவி தொகையையே ஒழுங்காக கொடுக்கல இதில் 1000,1500 ,
6லட்சம் கடன் இருக்கும் போது எப்படி கொடுக்க முடியும். எங்கிருந்து கொடுக்க போறாங்க, நாங்கள் வீட்டுக்கு ஒரு வேலை, கரும்பு, நெல் போன்ற விவசாய பொருட்களுக்கு உரிய விலை, சாதி, மதமற்ற ஒரே கட்சி அமமுக, அதனால் குக்கர் மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu