விழுப்புரத்தில் மரக்கன்று நட்டிய சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகள்

Sapling Plant | Railway Police
X

விழுப்புரம் ரயில் நிலைய பகுதியில்  தியாகிகளின் வாரிசுகள் மரக்கன்றுகள் நட்டினர்.

Sapling Plant- விழுப்புரம் ரயில் நிலைய போலீசாரின் ஏற்பாட்டில், சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வாரிசுகள் மரக்கன்றுகளை நட்டினர்.

Sapling Plant- நாடு சுதந்திரம் பெற்று 75-வது ஆண்டை முன்னிட்டு மத்திய அரசு சார்பில் கடந்த ஓராண்டு காலமாக பல்வேறு துறையின் சார்பில் குறிப்பாக ரெயில்வே நிர்வாகம், மத்திய ரெயில்வே பாதுகாப்பு படை உள்ளிட்ட துறைகளின் சார்பில் சுதந்திர போராட்ட தியாகிகளை அவரவர் வீட்டிற்கே சென்று கவுரவப்படுத்துதல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் விழுப்புரம் ரெயில்வே பாதுகாப்பு படை சார்பில் ரெயில்வே கால்பந்தாட்ட மைதானத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. விழாவிற்கு ரெயில்வே பாதுகாப்பு படை காவல் ஆய்வாளர் அருண்குமார் தலைமை தாங்கினார். உதவி ஆய்வாளர்கள் பிலோமின்ராஜ், ஸ்ரீதர், தனிப்பிரிவு ஜெகதீசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகளான விக்கிரவாண்டி புதுக்குப்பத்தை சேர்ந்த கோபால்சாமி மனைவி சரஸ்வதி, கோலியனூரை சேர்ந்த கிருஷ்ணன் மனைவி சுந்தராம்பாள், வளவனூரை சேர்ந்த தேவநாதன் மனைவி தனம்மாள் ஆகியோரை அழைத்து வந்தனர், அவர்கள் இந்நிலையில் கலந்துகொண்டு மரக்கன்றுகளை நட்டனர். தொடர்ந்து, அவர்களுக்கு ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் சார்பில் பொன்னாடை அணிவித்து கவுரவிக்கப்பட்டு நினைவுப்பரிசு வழங்கப்பட்டது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2



Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!