சுரங்கப்பாதை கேட்டு கண்டமங்கலத்தில் ஆர்ப்பாட்டம்

சுரங்கப்பாதை கேட்டு கண்டமங்கலத்தில் ஆர்ப்பாட்டம்
X

சுரங்கப்பாதை கேட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் 

கண்டமங்கலம் அருகே செல்லும் நான்கு வழி சாலையில் சுரங்கப்பாதை அமைத்து தர வலியுறுத்தி பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கண்டமங்கலம் வழியாக நாகப் பட்டினம் கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணி தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கண்டமங்கலம் ரயில்வே கேட் அருகில் மேம்பாலத்துடன் கூடிய சாலை விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது. இதற்கு இருபுறமும் சர்வீஸ் சாலை அமைக்கப்படும் நிலையில் நான்கு வழி சாலையை இரு பகுதிகளிலும் இரும்பு பைப்புகளால் அடைத்து வருகின்றனர்.

இதனால் இந்த பகுதியை பொது மக்கள் கடந்து செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக வடக்கு பகுதியில் இருந்து தெற்கு பகுதிக்கு செல்வதற்கு சுரங்க வழி பாதை அமைக்ககோரி கண்டமங்கலம் பகுதி பொதுமக்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு முன்பு தேசிய நெடுஞ்சாலை திட்ட இயக்குனர் சக்திவேல் கண்டமங்கலம் பகுதி முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்களிடம் கண்டமங்கலம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அதில் அரசு நிர்ணயித்த அளவுகோல் அடிப்படையிலேயே சாலை அமைக்கப்படுகிறது. அதனால் இந்த பகுதிக்கு சுரங்கப்பாதை வழி அமைக்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தனர். இதனால் பொதுமக்கள் ஆத்திரமடைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் சுரங்கபாதை அமைக்கப்படவில்லை என்றால் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்தனர்.

இதனை அடுத்து கண்டமங்கலம் காவல் நிலைய ஆய்வாளர் ரத்தினசபாபதி, காவல் உதவி ஆய்வாளர் பிரேம்குமார் தலைமையிலான காவல்துறையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அனைவரையும் அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்