விழுப்புரத்தில் மின்வாரிய அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் கருத்தரங்கம்

விழுப்புரத்தில் மின்வாரிய அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் கருத்தரங்கம்
X

விழுப்புரத்தில் நடைபெற்ற மின்வாரிய அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு மண்டல கருத்தரங்கம் 

விழுப்புரத்தில் நடந்த தொழிற்சங்களின் கூட்டமைப்பு கருத்தரங்கில் பொதுத்துறை நிறுவனங்களை பாதுகாக்க வேண்டும் என கோரிக்கை எழுப்பினர்

விழுப்புரத்தில் மின்வாரிய அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு சார்பில் மண்டல கருத்தரங்கம் நடைபெற்றது, தொமுச வட்டார செயலாளர் சண்முகம் தலைமை தாங்கினார்.

கருத்தரங்கில் பொறியாளர் சங்க மாநில பொதுச்செயலாளர் சம்பத்குமார், கணக்கு அலுவலர் சங்க மாநில பொதுச்செயலாளர் கிரிநாதன், ஐஎன்டியூசி மாநில தலைவர் .மனோகரன் ஆகியோர் கலந்து கொண்டு, மத்திய அரசு மின்துறையை பொதுத்துறையாக பாதுகாத்திட வேண்டும்,2021 மின்சார சட்ட திருத்த மசோதாவை கைவிட வேண்டும், தமிழகத்தில் குறைந்த மின் கட்டணம் நீடிக்க வேண்டும், குடிசை, விவசாயம், நெசவு, ஆகியவற்றிற்கு இலவச மின்சாரம் தொடர வேண்டும், மாநில உரிமைகளில் மத்திய அரசின் தலையீட்டை நிறுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகள் குறித்து விவாதித்தனர்,

கருத்தரங்கில் சம்மேளன மண்டல செயலாளர் கே.சம்பத்,தொமுச, சிஐடியு, அண்ணா தொழிற்சங்கம், பொறியாளர் சங்கம் , தொழிலாளர் பொறியாளர் ஐக்கிய சங்கம் ஆகியவற்றை சேர்ந்த நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர், முடிவில் சிஐடியு மாநில துணைத்தலைவர் அம்பிகாபதி அனைவருக்கும் நன்றி கூறினார்.

Tags

Next Story
வாடகை வீட்டை காலி செய்ய மறுத்ததால் மாநகராட்சி பில் கலெக்டர் மீீது புகார்!