சேதமடைந்த வாக்கு பெட்டி பெல் நிறுவனத்திடம் ஒப்படைப்பு

உபயோகத்தில் இல்லாத வாக்குப்பதிவு இயந்திரங்கள் பெல் நிறுவனத்திடம் ஒப்படைப்பு.
Bell Company - விழுப்புரத்தில் உபயோகத்தில் இல்லாத வாக்குப்பதிவு இயந்திரங்களை அனைத்துக்கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் பெல் நிறுவனத்திடம், மாவட்ட ஆட்சியர் மோகன் ஒப்படைத்தார். விழுப்புரம் மாவட்டத்தில் ஏற்கனவே பேரவைத் தேர்தலின்போது உபயோகப்படுத்தப்பட்டு, தற்போது உபயோகத்தில் இல்லாத 26 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 43 கட்டுப்பாட்டுக் கருவிகள், 227 விவிபாட் கருவிகள் ஆகியவற்றை பெங்களூர் பெல் நிறுவனத்திடம் ஒப்படைக்கும்படி மத்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, இவற்றை ஒப்படைப்பதற்காக, விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திர கிடங்கு திங்கள்கிழமை அனைத்துக்கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் திறக்கப்பட்டது. உபயோகத்தில் இல்லாத வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டுக் கருவிகள், விவிபாட் கருவிகள் ஆகியவற்றை மாவட்ட ஆட்சியர் மோகன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் பெல் நிறுவனத்திடம் ஒப்படைப்பதற்காக தேர்தல் துணை வட்டாட்சியர் தண்டபாணி மூலம் ஆயுதம் ஏந்திய காவலர் பாதுகாப்புடன் வாகனத்தில் ஏற்றி அனுப்பிவைக்கப்பட்டது.
அப்போது, மாவட்ட வருவாய் அலுவலர் (நில எடுப்பு) சரஸ்வதி, விழுப்புரம் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன், தனி வட்டாட்சியர் (தேர்தல்) செந்தில், விழுப்புரம் வட்டாட்சியர் ஆனந்தகுமார் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu