விழுப்புரத்தில் முன்கள பணியாளர்களுக்கு தினமும் மூச்சு, புத்தாக்க பயிற்சி

விழுப்புரத்தில் முன்கள பணியாளர்களுக்கு தினமும் மூச்சு, புத்தாக்க பயிற்சி
X

மூச்சுப்பயிற்சியில் ஈடுபட்டுள்ள முன்களப்பணியாளர்கள்.

விழுப்புரம் நகராட்சியில் பணியாற்றும் முன்கள பணியாளர்களுக்கு மூச்சு பயிற்சிக்கு ஏற்பாடு செய்து உள்ளனர்.

விழுப்புரம் நகராட்சியில் கொரோனா மற்றும் டெங்கு தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள களப் பணியாளர்களுக்கான மூச்சுப் பயிற்சியுடன் கூடிய யோகா கலை புத்தாக்கப் பயிற்சி நடைபெற்றது.

நகராட்சி பூங்காவில் இன்று நடைபெற்ற இப்பயிற்சியினை, நகராட்சி ஆணையர் சுரேந்திர ஷா தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். யோகா பயிற்சியாளர் கிருபாகரன் மற்றும் ஜனார்த்தனன், உடற்கல்வி ஆசிரியர் ஆகியோர் பயிற்சி அளித்தனர்.

இந்நிகழ்ச்சியில் துப்புரவு ஆய்வாளர் திண்ணாயிரமூர்த்தி, ரமணன், செல்வராஜ் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இப்பயிற்சி தினமும் காலையில் களப் பணியில் ஈடுபடுவதற்கு முன் பயிற்சி அளிக்க நகராட்சியால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!