மாணவி ஸ்ரீமதி கொலை வழக்கில் தாளாளர் உட்பட 5 பேருக்கு காவல் நீட்டிப்பு
விழுப்புரம் நீதிமன்றம்.
RIOT News -மாணவி ஸ்ரீமதி இறந்த வழக்கில் கைதான பள்ளி தாளாளர் உள்பட 5 பேருக்கு மேலும் 15 நாட்கள் காவல் நீட்டிப்பு செய்து விழுப்புரம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலத்தை அருகே கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்த கடலூர் மாவட்டம், பெரியநெசலூரை சேர்ந்த மாணவி ஸ்ரீமதி, கடந்த மாதம் 13-ந் தேதி மர்மமான முறையில் பள்ளி வளாகத்தில் இறந்து கிடந்தார்.
மாணவின் சாவுக்கு நீதி கேட்டு நடந்த போராட்டம் கலவரமாக வெடித்தது. இந்த நிலையில் மாணவியின் தாய் செல்வி, சின்னசேலம் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில் சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இச்சம்பவம் தொடர்பாக பள்ளி தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, முதல்வர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகியோரையும் போலீசார் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
இதனையடுத்து இவ்வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில் சேலம் சிறையில் இருக்கும் ரவிக்குமார் உள்ளிட்ட 5 பேரின் நீதிமன்ற காவல் நேற்று முன்தினத்துடன் முடிவடைந்தது. இதை தொடர்ந்து நேற்று சேலம் சிறையில் இருக்கும் 5 பேரும் காணொலி காட்சி மூலம் விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி புஷ்பராணி முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதையடுத்து இவ்வழக்கை விசாரித்த நீதிபதி புஷ்பராணி, பள்ளி தாளாளர் ரவிக்குமார் உள்பட 5 பேருக்கும் மேலும் 15 நாட்கள் அதாவது வருகிற 26-ந் தேதி வரை காவலை நீட்டித்து உத்தரவிட்டார்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu