வானூர் அருகே காலி குடங்களுடன் சி.பி.எம். கட்சியினர் காத்திருப்பு போராட்டம்
வானூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன் சி.பி.எம். கட்சியினர் காலி குடங்களுடன் போராட்டம் நடத்தினார்கள்.
விழுப்புரம் மாவட்டம் வானூர் வட்டத்திற்குட்பட்ட எடசேரி கிராம மக்களுக்கு உடனடியாக குடிநீர் வழங்க வலியுறுத்தி சி.பி.எம். கட்சி சார்பில் நடந்த காலி குடங்களுடன் காத்திருக்கும் போராட்டம் வெற்றி பெற்றது.
விழுப்புரம் மாவட்டம் வானூர் வட்டத்திற்கு உட்பட்ட எடசேரி கிராம மக்களுக்கு சுத்தமான குடிநீர் கேட்டு வியாழக்கிழமை வானூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு காலி குடங்களுடன் சி.பி.எம். கட்சி சார்பில் காத்திருக்கும் போராட்டம் நடத்த வியாழக்கிழமை சுமார் 11 மணி அளவில் அடுப்பு மற்றும் உணவு தயாரிக்கும் பொருட்களுடன் இடசேரி கிராம மக்கள் மற்றும் சி.பி.எம். கட்சியினர் 100 க்கும் மேற்பட்டோர் ஆண்கள், பெண்கள் என திரண்டு வந்தனர். வானூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு காத்திருக்கும் போராட்டத்தில் சி.பி.எம். கட்சியின் வட்ட செயலாளர் எம்.கே.முருகன் தலைமையில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.முத்துக்குமரன் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். போராட்டத்தில் சி.பி.எம். கட்சியின் வட்டக்குழு உறுப்பினர்கள் எஸ்.பாலமுருகன், ஐ.சேகர், கே.லலிதா, ஆர்.சேகர், அஸ்வத்தாமன், முகமது அனாஸ் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கோஷங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உடனடியாக தகவல் அறிந்த வானூர் ஒன்றிய குழு பெருந்தலைவர் உஷா பி.கே.டி. முரளி மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வட்டாட்சியர் ஆகியோர் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட சி.பி.எம். நிர்வாகிகள் மற்றும் வடசேரி ஊராட்சி மக்களுடன் சமாதான பேச்சு வார்த்தை நடத்தி உடனடியாக குடிநீருக்கான போர்வெல் அமைத்து தருவதாக உறுதியளித்தனர். இதனையடுத்து போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைத்து போராட்டம் வெற்றி பெற்றது என கூறியவாறு கலைந்து சென்றனர்.
உடனடியாக வட்டாட்சியர் அலுவலர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் போலீசார் உடனடியாக விரைந்து சென்று புது குப்பம் ஊராட்சி பகுதியில் குடிநீர் எடுக்க போர்வெல் போடும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு தரப்பினர் போர் போட விடாமல் தடுத்தனர். இதனால் அதிகாரிகளுக்கும் தடுத்த தரப்பினர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனையடுத்து அதிகாரிகள் போர் போடாமல் திரும்பி வந்தனர். இதனை குடிநீர் கேட்டு போராடிவரும் ஒரு தரப்பினர் ஏற்றுக்கொள்ள மறுத்தனர். மேலும் அதிகாரிகள் வருகிற திங்கட்கிழமை போர்வெல் அமைத்து தருவதாக கூறி ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர். ஆனால் போராடும் மக்கள் குடிநீர் கிடைக்கும் வரை அலுவலகத்திலேயே காத்திருக்கும் போராட்டத்தை நடத்தப் போவதாக அறிவித்து இன்று காலை முதல் இரவு வரையும் குடிநீர் கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என அறிவித்து போராட்டத்தை நடத்தினர். இதில் ஆண்கள் பெண்கள் என சுமார் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu