முண்டியம்பாக்கத்தில் சுரங்கப்பாதை அமைக்க மா. கம்யூ., கோரிக்கை

முண்டியம்பாக்கத்தில் சுரங்கப்பாதை அமைக்க மா. கம்யூ., கோரிக்கை
X

(கோப்பு படம்)

விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரி எதிரே சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் அமைய உள்ள நிலையில், சப்வே அமைத்து தர மா. கம்யூ., கட்சியினர் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டத்திற்கு உட்பட்ட முண்டியம்பாக்கம் கிராமத்தில் தேசிய நெடுஞ்சாலையில் செஞ்சி, வேலூர், ஆரணி, ஒரத்தூர் உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்ட வெளியூர்களுக்கு செல்ல சப்வே அமைக்கக் வலியுறுத்தி, விழுப்புரம் மாவட்டம் அலுவலகம் சென்று விக்கிரவாண்டி ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூ., (சிபிஎம்) கட்சி சார்பில் ஒன்றிய செயலாளர் கிருஷ்ணராஜ் தலைமையில் மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன் முன்னிலையில் கோரிக்கை மனுவை கலெக்டர் மோகனிடம் அளித்தனர்.

மனுவில் கூறியிருப்பதாவது,

முண்டியம்பாக்கத்தில் விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமணை அமைந்துள்ளது. இங்கு தினசரி ஆயிரக்கணக்கான மக்கள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். மருத்துவமணை திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ளது. அதேபோல் முண்டியம்பாக்கம் பேருந்து நிறுத்தம், ஒரத்தூர் உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு செல்லும் சாலை மற்றும் ரயில்வேகேட் அருகே அமைந்துள்ளது. ஆனால் அவை அனைத்தும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அடுத்த பக்கம் அமைந்துள்ளதால் தேசிய நெடுஞ்சாலையை கடந்து செல்லுவதில் அனைவரும் அவதிப்பட்டு வருகின்றனர்.

அதனால் அந்த இரண்டு இடங்களிலும் தேசிய நெடுஞ்சாலையை மக்கள் மற்றும் நோயாளிகள், அந்த வழியை பயன்படுத்தும் மாணவ மாணவிகள் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு பலர் படுகாயம் அடைந்து வருகின்றனர். அந்த இடத்தில் சில உயிரிழப்புகளும் ஏற்பட்டு உள்ளது.

இதனால் முண்டியம்பாக்கம் மற்றும் ஒரத்தூர் கிராம மக்கள் மட்டுமின்றி விழுப்புரம் மற்றும் விக்கிரவாண்டி வட்டத்தைச் சேர்ந்த பல தரப்பினரும் மருத்துவமணை மற்றும் முண்டியம்பாக்கம் பேருந்து நிறுத்தம் ஆகிய இரண்டு இடங்களிலும் தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் அமைத்து விபத்து இல்லா நிலையை உருவாக்க நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

அதனை ஏற்று அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமணை எதிரே மட்டும் மேம்பாலம் அமைக்க முடிவு செய்து, அந்த இடத்தை சம்பந்தப்பட்ட துறையினர் பார்வையிட்டு சென்றனர், ஆனால் இதுநாள் வரை இன்னும் பணிகளை தொடங்கவில்லை, மக்களின் கோரிக்கை அடிப்படையில் அங்கே மேம்பாலம் அமைப்பதை சிபிஎம் சார்பில் வரவேற்கிறோம்.

ஆனால், அந்த மேம்பாலம் அமைக்கப்பட்ட பிறகு முண்டியம்பாக்கம் பேருந்து நிறுத்தத்தில் இருந்து ஓரத்தூர் உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு செல்லும் சாலைக்குப் போக முடியாத வகையில் தேசிய சாலையில் நடுவே தடுப்பு ஏற்படுத்தப்பட்டு,முண்டியம்பாக்கத்தில் இருந்து ஒரத்தூர் போக்குவரத்து முழுமையாக தடைசெய்யப்படும் என தெரிகிறது.

முண்டியம்பாக்கம் பேருந்து நிறுத்தத்தில் இருபுறமும் செல்லவிடாமல் நிரத்தரத் தடை ஏற்படுத்தப்பட்டால் இரண்டு கிராம பொதுமக்களும் பாதிப்படைவர். அக்கம்பக்க கிராம மக்களும் பெரும் அவதிப்படுவர். கிராம விவசாயிகளும், பெண்களும், மாணவர்களும் கடும் அலைச்சலுக்கு உள்ளாக்கப்படுவர்.

முண்டியம்பாக்கம் பேருந்து நிறுத்தத்தில் இருந்து மருத்துவமணை எதிரே அமைக்கப்படும் புதிய பாலம் வரை சென்றுதான் எதிர்ப்புறம் உள்ள பேருந்து நிறுத்தத்திற்கு வரமுடியும். இதனால் அனைவரும் ஒரு கிலோமீட்டர் தூரம் கூடுதலாக சுற்றி வர வேண்டி வரும் இதனால் அனைத்துப்பகுதி மக்களுக்கும் பெரும் இழப்பு ஏற்படும் முண்டியம்பாக்கம் ரயில்வே கேட் பக்கம் உள்ள குடும்பங்களில் இறப்பு நேரிட்டால் பிரேதத்தை எடுத்துக்கொண்டு ஒரு கிலோமீட்டர் சுற்றித்தான் சுடுகாட்டுக்குச் செல்ல முடியும் எனற அவல நிலை ஏற்படும் மேலும் கால்நடை மருத்துவமணைக்கு செல்வதற்க்கும் இதே நிலைதான் ஏற்படும்

உடனடியாக மாவட்ட ஆட்சியர் தலையிட்டு முண்டியம்பாக்கம் பேருந்து நிறுத்தத்திலும் ஒரு மேம்பாலம் அமைத்திட வேண்டும்.

மேலும் மருத்துவமனை எதிரே அமைக்கும் மேம்பாலத்தை இருபுறமும் சுவர் எழுப்பி மண்கொட்டி அதன் மேல் மேம்பாலம் அமைக்காமல் காங்கிரீட் தூண்கள் எழுப்பி அதன் மேல் மேம்பாலம் அமைத்து இரண்டு கிராமங்களுக்கும் இடையே போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளது.

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!