விழுப்புரத்தில் அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சிபிஎம் ஆர்ப்பாட்டம்

விழுப்புரத்தில் அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சிபிஎம் ஆர்ப்பாட்டம்
X

மத்திய அரசின் அக்னிபாத்தை எதிர்த்து சிபிஎம் கண்டன ஆர்ப்பாட்டம்.

விழுப்புரத்தில் இன்று மத்திய அரசை கண்டித்து சிபிஎம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விழுப்புரத்தில் மத்திய அரசின் அக்னிபாத்தையை எதிர்த்து விழுப்புரம் மாவட்ட சிபிஎம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது,

ஆர்ப்பாட்டம் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாவட்ட செயலாளர் என்.சுப்பிரமணியன் தலைமையில் இன்று நடைபெற்றது, ஆர்ப்பாட்டத்தில் முப்படைகளில் அக்னி பாதை என ஆள் சேர்க்க முயலும் மத்திய பாஜக மோடி அரசை கண்டித்து பேசினர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பி.குமார், ஜி.ராஜேந்திரன், ஏ.சங்கரன், ஆர்டி.முருகன், வட்ட செயலாளர்கள் வி.கிருஷ்ணராஜ், எஸ்.கணபதி, கே.சிவக்குமார், எம்.கே.முருகன், ஏ. சகாதேவன், ஆர்.கண்ணப்பன், மாவட்ட குழு உறுப்பினர்கள் ஏ.கிருஷ்ணமூர்த்தி, வி.அர்ச்சுணன், கே.அம்பிகாபதி, கே.சுந்தரமூர்த்தி, ஆர்.தாண்டவராயன், எஸ்.பிரகாஷ், கே.வீரமணி, ஏ.நாகராஜ், எஸ்.சித்ரா உட்பட 100க்கும் மேற்பட்டோர் மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பியவாறு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.முடிவில் நகர செயலாளர் என்.மேகநாதன் நன்றி கூறினார்.

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்