மாணவி மரண வழக்கில் உண்மை குற்றவாளிகளை கைது செய்ய சிபிஎம் வலியுறுத்தல்
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விழுப்புரம் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் சின்னசேலம் தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதியின் மரணத்தில் உண்மை குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.கீதா தலைமை தாங்கினார், ஆர்ப்பாட்டத்தில் மாநில குழு உறுப்பினர் எஸ்.வாலண்டினா, மாவட்ட செயலாளர் என்.சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டு கனியாமூர் சக்தி தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதியின் மரணம் குறித்த விசாரணையை துரிதப்படுத்தவும், மரணத்திற்கு காரணமான உண்மையான குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யவும் கோரிக்கை விடுத்தனர்.
மேலும், பள்ளி நடந்த வன்முறைகளை காரணம் காட்டி அப்பாவிகளை கைது செய்யும் நடவடிக்களை கைவிடவேண்டும், மரணமடைந்த மாணவியின் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் நிவாரணம் வழங்கி, அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தி பேசினர்,
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பி.குமார்,வி.ராதாகிருஷ்ணன்,எஸ்.முத்துக்குமரன்,ஏ.சங்கரன், ஜி.ராஜேந்திரன், எஸ்.வேல்மாறன், சே.அறிவழகன், ஆர்டி.முருகன், இடைக்குழு செயலாளர்கள் கண்ணப்பன், கே.குப்புசாமி, வி.கிருஷ்ணராஜ், எம்.கே.முருகன்,டி.ராமதாஸ், ஏ.சகாதேவன், எஸ்.கணபதி,கே.சிவக்குமார் உட்பட 300 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu