100 நாள் வேலையை 200 நாளாக்க சிபிஎம் தீர்மானம்
விழுப்புரத்தில் நடைபெற்ற சிபிஎம் இடைக்குழு மாநாடு
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23-வது விழுப்புரம் வட்ட மாநாடு விழுப்புரத்தில் நடைபெற்றது, பி.சிவராமன், எஸ்.நீலா,கே.கலிவரதன் ஆகியோர் தலைமை தாங்கினர், மாவட்ட குழு உறுப்பினர் ஏ.ராஜிவ்காந்தி அனைவரையும் வரவேற்று பேசினார்,
மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.ராதாகிருஷ்ணன் மாநாட்டை தொடங்கி வைத்து தொடக்க உரையாற்றினார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.முத்துகுமரன் மாநாட்டை வாழ்த்தி பேசினார்,
மாநாட்டில் பயிர் காப்பீடு வரும் 15 ந்தேதி என்பதை கால நீட்டிப்பு வழங்க வேண்டும், கரும்பு விவசாயிகள் நிலுவை தொகை உடனடியாக வழங்க வேண்டும், நூறுநாள் வேலையை 200 நாட்களாக்க வேண்டும், நிறுத்தப்பட்ட தடம் எண் 22 நகரபேருந்தை மீண்டும் அரியலூர் திருக்கைக்கு இயங்கவேண்டும்,மைக்ரோ பைனான்ஸ் பிடியில் இருந்து சிறு, குறு விவசாயிகளை காப்பாற்ற இயக்கம் நடத்த வேண்டும், தலித் மக்களுக்கு வழங்கிய இலவச வீட்டு மனை பட்டாவை கிராம கணக்கில் ஏற்றவேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாவட்ட செயலாளர் என்.சுப்பிரமணியன் நிறைவு உரையாற்றினார்,முடிவில் வட்ட குழு உறுப்பினர் ச.மதுசுதன் நன்றி கூறினார்.மாநாட்டில் வட்ட செயலாளர் ஆர்.கண்ணப்பன், மாவட்ட குழு உறுப்பினர் ஏ.நாகராஜன், வட்ட குழு உறுப்பினர் மது சுதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மாநாட்டில் மீண்டும் புதிய விழுப்புரம் வட்ட குழு செயலாளராக வழக்கறிஞர்.ஆர்.கண்ணப்பன் தேர்வு செய்யப்பட்டார்,12 பேர் கொண்ட இடைக்குழு, மற்றும் டிசம்பர் 16,17 ல் நடக்கவுள்ள மாவட்ட மாநாட்டிற்கு 26 பேர் கொண்ட பிரதிநிதிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu